பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்ாரிஸில். தமிழ் நூல்கள் 151

இக்காலத்தில் அச்சுப் புத்தகங்களின் அமைப்பு எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. அக்காலத்தில் முகப்புப் பக்கமே நூலின் முகவுரை போல அமைந்திருக்கும். கல்விச் சங்கத்தில் 1737ஆம் ஆண்டில் இராமாயணம் உத்தர காண்டம் அச்சாகியது. அதன் முகப்புப் பக்கம் வேடிக்கை யாக இருக்கும்.

மல்வளம் பொருந்திய மாநில முழுவதும் சொல்வள மிகுதியில் துதிக்கும் சீர்த்தி எல்லியாட் டரசன் இசைமனு நெறியே செல்வச் செங்கோல்

செலுத்தும் காலத்து இங்கிலிசு வருடம் 1815 சாலிவாகன சக வருடம் 1737 இதிணிகழா கின்ற பவ வருடத்தில்

அரும்பல கலைக ளாய்ந்தறி செல்வம் தரும்புகழ்ச் சங்கத் தாரவர் தம்மால் தமிழ்ச் சங்கத்திற் றமிழ் கற்கப் புகுமவர்கள் சொல்லும் பொருளும் எளிதினுணர்தற் பொருட் டுத் தமிழ்ச் சங்கத் தலைமைப் புலமைத் திருச் சிற்றம்பல தேசிகன் கொடுந்தமிழ் கடையொடும் செந்தமிழ் கடைவிராஅ யேனைய காண்டப் பொருளுக் தொகையுறச் செய்த விராமாயணத் துத்தர காண்டக் கதை தொண்ட மண்டலத்தின் கண் விளங்கிய சென்ன பட்டணத்துக் கல்விச் சங்கத் தச்செழுத்திற் பதிப்பிக்கப்பட்டது. மேலே உள்ள அவ்வளவும் அந்தப் புத்தகத்தின் முகப்புப் பக்கத்திலே கண்டவை,

இத்தகைய பழைய புத்தகங்களே, கையால் பண்ணிய காகிதங்களில் அச்சிட்டிருக்கிருர்கள், அவை எவ்வளவு உறுதியாக இருக்கின்றன ! -