பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 கண்டறியாதன கண்டேன்

'கான் விசித்திரமான பழம் பொருள்களே வைத் திருக்கிறேன். பதினெட்டாம் நூற்ருண்டுப் பண்டங்களே விற்ருலே எனக்கு இருபது வருஷத்துச் செலவுக்குக் காணும்' என்ருளாம்.

மறுநாள் (21-7-70) பிற்பகல் 440க்கு விமானத்தில் லண்டனுக்குப் புறப்பட வேண்டும். அன்று கால ஐந்து மணிக்கே எழுந்துவிட்டேன். பல அன்பர்கள் வந்தார்கள். சில கடைகளுக்குப் போய்ப் பார்த்தோம். பிறகு உணவு கொண்டு பிற்பகல் புறப்பட்டோம். அன்பர் ராமசாமி. ஸேன் ழான் ஆகிய இருவரும் எங்களை வழியனுப்ப வந்தார்கள். .

சரியாகப் பத்து நாட்கள் பாரிஸில் தங்கினேன். மேல் காட்டு வாழ்க்கையைக் கண்டிராத எனக்கு எல்லாம் புதுமையாக இருந்தன. நாகரிகக் கோபுரத்தின் உச்சியில் ஒளிர்ந்த பாரிஸ் நகர வாழ்க்கையைப் பார்த்தேன்; கலையும் களியாட்டமும் கிரம்பிய அதை முற்றும் பார்க்க முடியுமா? அதற்கென்று தனித் தகுதி வேண்டும். .

பார்த்த அளவில் வியப்பும், மகிழ்ச்சியும். தெளிவும் பெற்றேன். பாரிஸ் மாநகரத்திடம் விடைபெற்றுப் புறப் பட்டேன்.