பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவிய மாளிகை 193

உள்ளன. சுற்றிலும் நீருற்றுக்கள் இருக்கின்றன. பல தெருக்கள் கூடும் இடத்தில் இந்தச் சதுக்கம் இருக்கிறது.

மாலேநேரத்தில் மக்கள் இங்கே வந்து பொழுதைக் கழிக்கிருர்கள். நூற்றுக்கணக்கான புருக்கள் இங்கே வருகின்றன. கடலே முதலிய தானியங்களே வாங்கி அவற்றிற்குப் போடுகிருர்கள். கும்பல் கும்பலாக அவை வந்து கொத்துகின்றன; ஆட்களின் தோளின் மேலும் கையின்மீதும் தலையின்மீதும் பயமில்லாமல் அமர்கின்றன. ஆங்கிலேயர்கள் புருக்களைக் கொல்வதில்லையாம். அவை சமாதானத்துக்கும் அன்புக்கும் அடையாளம். இந்தச் சதுக்கத்தில் ஆடல் பாடல்களும் கோமாளிக் கூத்துக்களும் நடக்கின்றன. பகலெல்லாம் உழைத்து அலுத்துப் போனவர்களுக்கு, இங்கே வந்து கவலையற்றுப் புருக் களுக்குத் தீனி போட்டு மகிழ்வதில் ஆறுதலும் அமைதியும் பிறக்கின்றன. .

இந்தச் சதுக்கத்துக்கு அருகில் ஓர் ஓவிய மாளிகை g)05#3 sp3. G 38°u go soué firäu (National Gallery of Portraits) என்ற பெயருடையது அது. இங்கே பல நாட்டு ஒவியங்களைத் தொகுத்து வைத் துப் பாதுகாத்து வருவதோடு, பலரும் வந்து பார்த்து மகிழும்படி வைத்திருக்கிருர்கள். 2000க்கு மேற்பட்ட வண்ண ஒவியங்களே இங்கே காணலாம். ஒவ்வொரு காலகட்டத்தில் படைக்கப் பெற்றவற்றையும் தனித்தனியே ஒழுங்குபடுத்தி வைத்திருக்கிருர்கள். அநேகமாக ஐரோப்பாவில் இருந்த மிகப் பெரிய ஓவியக் கலைஞர்களின் எழிற்படைப்புக்களே இங்கே கண்டு மகிழலாம். இத்தாலியிலிருந்து வந்த வண்ணச் சித்திரங்களே மிகுதி. பைபிள் சம்பந்தமான ஒவியங்கள் கண்கொள்ளாக் காட்சியாக விளங்கின்றன.

ஜான் வில்க்ஸ் என்பவர் குறும்புக்காரர். போக்கிரிகூட. அவர் 18 ஆம் நூற்ருண்டில் பார்லிமெண்டு அங்கத் தினராக இருந்தார். அக்காலத்தில் ஒருவர் வைத்திருந்த ஒவியங்கள் விற்பனைக்கு வருவதாகக் கேள்வியுற்ருர்.

கண்டறி-13