பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர் ஒவியங்கள் 203,

யால் எடுத்துவிட்டார்களாம். செப்பஞ் செய்து இனி மேல் வைததாலும் வைக்கலாம்: வைப்பார்கள் என்றே. கம்புகிறேன்.

நம் நகரத்திலேயே க்ாந்தியின் சிலை என்று சொல்லி வைத்திருக்கிறதில் அவருடைய அடையாளமே தெரிய வில்லையே! நம் ஊர்ப் பிருகஸ்பதிகளுக்கே தெரியாத போது அயல் காட்டவர்களைக் குறைகூறி என்ன பயன்:

காந்தியடிகள் திருவுருவம் சரியாக இல்லை என்ப தைக் கேட்டபோது எனக்குப் பழைய கதை ஒன்று கினேவுக்கு வந்தது. பெரியவர்களுடைய சித்திரத்தை வனைய வேண்டுமானல் பயபக்தியுடன் செய்யவேண்டும், பழங்காலத்தில் தெய்வங்களின் வேஷத்தைத் தரிக்கும் நாடகக்காரர்கள் கூட விரதமிருந்து வேஷம் போடு வார்களாம்.

ஒரு சமயம் அக்கினி பகவானுக்கு ஏழு முனிவர் க்ளின் மனைவிமாரின் மேல் ஆசை உண்டாயிற்ரும். இதை அறிந்து அவனுடைய மனைவி சுவாகாதேவி மிகவும் வருந்தினுளாம். ஆயினும் தன் கணவன் விருப் பத்தை நிறைவேற்றத் துணிந்து தானே ஒவ்வொரு முனி பத்தினியின் வடிவத்தை எடுத்துக்கொண்டு அவனுக்கு இன்பம் தந்தாள், ஆறு முனிவர்களின் மனைவியரைப் போல மாற முடிந்தது. ஆனல் வசிட்ட முனிவருடைய மனேவியாகிய அருந்ததிய்ைப்போலக் கோலம் கொள்ள முயன்றபோது அவளால் அந்த வடிவத்தை எடுக்க முடிய வில்லையாம். அத்தனே தூயவள் அருந்ததி. -

மகாத்மாவின் வடிவத்தை மெழுகிலாகட்டும், சிலையி லாகட்டும் அமைப்பது எளிய காரியம் அன்று; தூய உள்ளம் பெற்ற கலைஞர்களே அதை ஓரளவு செய்ய முடியும் போலும்! -

மதாம் துஸாத் மெழுகுச் சாலையைச் சுற்றிப் பார்க் ததில் பல வரலாற்றுப் பெருமக்களைத் தரிசித்த இன்பம்