பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித் திருநகர் 215

தொடங்கியது. நாளடைவில் ஒவ்வொரு கல்லூரியாக உண்டாயிற்று. இன்று கல்லூரிகளாகிய கலைக்கோயில்கள் கிரம்பிய கல்வித் திருநகரமாக, கலைமகள் இராசதானியாக விளங்குகிறது. ஆக்ஸ்போர்டு.

பெரும்பாலும் பழங்காலத்தில் தோன்றிய இடங் களிலே கல்லூரிகள் இருக்கின்றன. அமைப்புக்கள் மாறி லுைம் இன்னும் பழைய சுவர்களையும் கட்டடங்களையும் சில இடங்களில் காணலாம். 17ஆம் நூற்ருண்டிலிருந்து கட்டப்பட்ட கட்டடங்கள் இப்போது உள்ளன.

ஒவ்வொரு கல்லூரியின் அமைப்பும் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட வடிவிலே அமைந்திருக்கிறது. புல்வெளி, பூங்கா. கூடம், மாணவர் அறைகள், ஆசிரியர்கள் அறைகள், பிரார்த்தனைக்கூடம், விளையாட்டிடம், கலே அரங்கு என்று பல்வகைப் பகுதிகள் ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ளன. புல்வெளியும் பூங்காவும் இல்லாத கல்லூரியே இல்லை. அதைப் பார்த்தபோதுதான் முன் சொன்ன கம்பனுடைய பாடல் எனக்கு கினேவுக்கு வந்தது.

கல்லூரியின் முகப்புவாசலருகே காவலாளி இருப்பார். தமக்குரிய சிறிய இடத்தில் அவர் தங்கி, வருவாருடைய கேள்விகளுக்குப் பதில் அளித்து வழிகாட்டுவார். சில கல்லூரிகளில் தலைவாசல் பெரியதாக இருக்கும். க்றைஸ்ட் சர்ச் கல்லூரியின் முகப்பில் டாம் டவர் என்ற கோபுரம் இருக்கிறது. அங்கே ஒரு மணி மண்டபம் உண்டு. அங்குள்ள மணி ஆறு டன் எடை உள்ளது. சரியாக இரவு 9-05க்கு அந்த மணி நூற்ருெரு தடவை அடிக்கும். அப்பால் யாரும் வெளியில் போகக்கூடாது.

கல்லூரி நுழைவாயில்களில் விளையாட்டைப் பற்றிய அறிக்கைகள், பரீட்சை நேரங்கள் முதலிய அறிக்கைகள் உள்ள பலகைகள் இருக்கும். உள்ளே போல்ை புல் வெளியைக் காணலாம். அதன் மூன்று புறங்களிலும் மாணவர்களின் அறைகள் இருக்கும். காலாவது பக்கத்தில் பிரார்த்தனைக் கூடம் இருக்கும்.