பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்ளையா, பரிசா? 235

ஒருசார் இலங்குகின்றன. மண்ணும் பீங்கானும் கண்ணுடி யும் உண்டாக்கிய அழகுப் பண்டங்கள் ஒரு பக்கம் காட்சி யளிக்கின்றன. அச்சிட்ட சித்திரமும் வரைந்த ஓவியங்களும் ஒரு புறம் ஒளிர்கின்றன. ஒரு பக்கம் கலைகளைப் பற்றிய நூல்கள் அடங்கிய நூலகம் இருக்கிறது. அங்கே மூன்று லட்சம் வெளியீடுகள் உள்ளன. உலகத்திலே கலை சம்பந்தமான நூலகங்களில் இதுதான் மிகப்பெரியது.

உலோக வேலைப்பாடுகள் அமைந்த பண்டங்கள் ஒரு புறம் உள்ளன. வெள்ளியும் தங்கமும், பித்தளேயும் வெண் கலமும், எஃகும் இரும்பும் இங்கே வெவ்வேறு உருவத்தில் தோற்றம் அளிக்கின்றன. வண்ண ஒவியங்கள் ஒரு பகுதி யிலும், சித்திர ஆடைகள் ஒரு பகுதியிலும், மரவேலைப் பாடுகள் ஒரு பகுதியிலும், இந்தியப் படைப்புக்கள் ஒரு பகுதியிலும் இருக்கின்றன.

41, 47A, 47B என்ற மூன்று அறைகளில் இந்தியக் கலைப் படைப்புக்களே வைத்திருக்கிருர்கள். அங்கே போய்ச் சற்று கிதானமாகப் பார்த்தோம். நமக்குப் பழக்க மான பொருள்களைப் பார்த்தால் விளங்கும். மற்ற இடங் களுக்குப் போளுல் யாரையாவது விளக்குவதற்கு அழைத்துக்கொண்டு போகவேண்டும். அதற்கெல்லாம் நேரம் ஏது?

, 47B என்ற அறையில் சிற்பங்களும், 41ஆம் அறையில் முகலாயர் காலத்திய ஓவியமும் கைத்தொழிற் பண்டங் களும், 47A அறையில் இந்திய ஐரோப்பிய ஆடை வகைகள், மரப்பண்டங்கள், வரலாற்றுச் சின்னங்கள் ஆகியவைகளும் இருக்கின்றன. சிந்து வெளி நாகரிகத்தின் சின்னங்கள் முதல், 14ஆம் நூற்ருண்டுப் படைப்புக்கள் வரையிலுள்ள சிற்பப் பொருள்களே 47B என்ற அறையில் வைத்தி ருக்கிருர்கள். சாஞ்சியிலிருந்து வந்த போதிசத்துவருடைய திருவுருவம் ஒன்று இங்கே ஒளிர்கிறது. அது ஒன்பதாவது நூற்ருண்டைச் சார்ந்ததென்று கருதுகிருர்கள். மிக அழகிய நடராஜர் திருமேனி ஒரு பக்கம் கிற்கிறது. இந்த