உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 கண்டறியாதன கண்டேன்

அடிக்கல் நாட்டிய இந்தக் காட்சிச்சாலை உருவாகி 1909ஆம் ஆண்டு ஏழாம் எட்வர்டு மன்னரால் திறப்பு விழாவைப் பெற்றது.

இங்கே கலப்பண்டங்களை இருவேறு பெரும் பிரிவு களாகப் பிரித்து வைத்திருக்கிருர்கள். கால அடைவில் பல நுண்கலைப் பொருள்களேத் தொகுத்து வைத்துள்ள பகுதி ஒன்று. குறிப்பிட்ட ஒருவகைக் கலைப் படைப்பை ஆராய்வதற்கு வருபவர்களுக்கு உதவியாக அவற்றின் வளர்ச்சி முறையைக் காட்டும் பகுதி மற்ருென்று. இங்கே 125 அறைகளில் கலைப்பொருள்கள் காட்சி அளிக்கின்றன. அவற்றில் சில அறைகள் அலுவலகத்துக்காகவும் வேறு சில பண்டங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

இந்தக் காட்சிச்சாலையில் பல வேறு காலங்களில் பல வேறு நாடுகளில் தோன்றிய கலைப் பண்டங்கள் உள்ளன. சிற்பங்களும், சித்திரங்களும், விக்கிரகங்களும், அணிகலன்களும், மண்பாண்டங்களும் உலோகப் பாத்திரங் களும், படைக்கலன்களும், படுக்கை விரிப்புகளும், ஆடை களும், இசைச் கருவிகளும், துணிமணிகளும், கண்ணுடிப் பண்டங்களும் உள்ளன. பிரிட்டனில் உண்டானவையும், ரோமாபுரியில் தோன்றியவையும், கிரேக்க நாகரிகத்தின் படைப்புக்களும், இந்தியக் கலைப்பண்டங்களும், இஸ்லாமிய காகரிகப் பொருள்களும் வகைவகையாக வைக்கப் பட்டிருக்கின்றன.

இங்கிலாந்துக் கலைஞர்கள் படைத்த அழகுப் பொருள் களில் 1520ஆம் ஆண்டு முதல் 1900 ஆண்டு வரையில் தோன்றியவை காட்சியளிக்கின்றன. ஐரோப்பாவில் மற்ற நாடுகளிலிருந்து 1570ஆம் ஆண்டிலிருந்து பத்தொன்பதாம் நாற்ருண்டின் ஆரம்ப காலம் வரையில் தோன்றியை {❍ ☾ᎢēiᎢöJ ,

இரண்டாம் பிரிவிலே ஒவ்வொரு வகையாகப் பிரித்து வைத்திருப்பவற்றில் கட்டிடக் கலையும் விக்கிரகக் கலையும்