பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அரசி வாழும் அரண்மனை

லண்டனில் அங்கங்கே அ மு. கிய பூங்காக்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் சுத்தமாக வைத்திருக் கிருர்கள். அழகிய மலர் மரங்கள், பூஞ்செடிகள், ஓடைகள், ஊற்றுக்கள், புல்வெளிகள் உள்ளன. எப்போதும் அசுர வேகத்தில் வாழ்க்கையை நடத்தும் மக்கள் இந்தியாவில் பெரிய நகரங்களில் இருக்கிருர்கள். லண்டன் மாநகரத்தைப் பற்றிக் கேட்க வேண்டுமா, என்ன? ஆனால் இந்தியாவுக்கும் மேல் காடுகளுக்கும் ஒரு வேறுபாடு: அங்குள்ளவர்களுக்கு கன்ருக உழைக்கத் தெரியும்; அப்படியே நன்ருக ஒய்வு பெறவும் தெரியும். வார இறுதியில் எல்லா வேலைகளையும் மறந்துவிட்டு உல்லாசமாக எங்காவது போய் ஓய்வை அநுபவிக்கிருர்கள். வழக்கமான உத்தியோகம், தொழில் முதலியவற்றுக்குப் புறம்பாக ஏதேனும் கலே அல்லது விளையாட்டில் ஈடுபட்டிருக்கிருர்கள். ஒய்வு நேரத்தில் அவற்றைச் செய்து மகிழ்கிருர்கள். -- இந்தியாவில் அப்படி இல்லேயே அலுவலகத்தில் செய்கிற வேலையை வீட்டிலும் செய்கிரு.ர்கள். வேல் நேரங்களில் எப்படியோ பொழுது போக்கி விட்டுக் கடைசி. நேரத்தில் அவசர அவசரமாக அள்ளித் தெளிக்கிருர்கள். தமக்கென்று மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவதற்கென்று எந்த "ஹாபி (hobby) யையும் வைத்துக் கொள்வதில்லை. அதல்ை வேலையிலிருந்து நீங்கியவுடன் பொழுதைப் போக்க வகை தெரியாமல் திண்டாடுகிருர்கள். காலத்தை நாம் கொல்ல வேண்டும்; இல்லாவிட்டால் காலம் கம்மைக்

கண்டறி.-17 " .