பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏமாற்றமும் மாற்றமும் 287

கார்களே இப்படி இருந்தால் ஒடுகிற கார்கள் எப்படி இருக்க வேண்டும்! -

பிராங்க்பர்ட் நகரத்தை அடைந்தோம். ஒரு டாக்ளி வைத்துக்கொண்டு கான் என்பவர் கடைக்குப் போனுேம், அவர் மேல்மாடியில் கடை வைத்திருக்கிரு.ர். சாமான்களைத் துரக்கிக் கொண்டு அங்கே போனேம். மேல் காடுகளில் சுமை தூக்கும் கூலி வேலைக்காரர்கள் இல்லை. அவரவர்கள் பண்டங்களே அவரவர்களே சுமந்து செல்ல வேண்டும். கான் கடையில் எவ்வளவோ சாமான்கள் இருந்தன. முதலில் தங்குவதற்கு ஏதேனும் இடத்தைப் பார்த்துக் கொண்டு மற்றவற்றைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. கானே விசாரித்தோம். அதோ ஸ்டேஷன் இருக்கிறது. அங்கே போய் விசாரித்தால் செள

கரியமான அறைகள் கிடைக்கும்' என்ருர்,

மறுபடியும் எங்கள் சாமான்களைத் தாக்கிக்கொண்டு கீழே வந்து ரோடுவழியே நடந்தோம். அந்த ரெயில்வே ஸ்டேஷன் நூறு கஜ தூரத்தில்தான் இருந்தது. ஆனல் கையிலுள்ள பையைச் சுமந்து போனபோது அது எத்தனையோ மைல்களுக்கு அப்பால் இருந்தது போல இருந்தது. இடக்கையிலும் வலக் கையிலும் மாற்றி மாற்றித் தாக்கிச் சென்றேன். அங்கங்கே வைத்து வைத்து எடுத்துக்கொண்டு போனேன். மேல்மூச்சு வாங்கியது. இது வரையில் சுகமாகப் பயணம் செய்தபோது இந்தப் பாரம் தெரியவில்லை. இப்போது அது அழுத்தியது. உடனே இந்தி யாவுக்குச் சென்றுவிடலாமா என்று தோன்றியது. 'ஜெனிவாவும் வேண்டாம்; ரோமும் வேண்டாம். அடுத்த விமானத்தில் ஊருக்கே போய்விடலாம்' என்று கனே .சனிடம் சொன்னேன். அவர் என்னுடைய அவலநிலையைக் கண்டு பரிதாபப்பட்டார். அவர் மட்டும் என்ன? அவரும் தம் சுமையைத் தாக்கமாட்டாமல் தாக்கி வந்தார்.

அப்பாடி ஸ்டேஷனே அடைந்தோம். அது ஸ்டேஷன: உலகமே சந்திக்கும் இடம். எங்கே அறை கிடைக்கும் என்று