பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏமாற்றமும் மாற்றமும் 291

மாலை 6 மணிக்கு டாண் என்று எல்லாக் கடைகளையும் சாத்திவிடுகிருர்கள். லட்சம் கொடுக்தாலும் அதற்கப்புறம் திறக்கிறதில்லை. அவ்வளவு கட்டுப்பாடு!

கான் கடைக்கும் வேறு சில கடைகளுக்கும் சென்று சில சாமான்களே வாங்கினுேம். பிறகு ஏர் இந்தியா அலுவலகம் வந்தோம். அங்கே கின்றிருந்த ஒருவர், 'நமஸ் காரம்' என்று தமிழில் சொன்னர். அந்தத் தமிழ் ஜிலு ஜிலுவென்று எங்கள் காதில் விழுந்தது. அவர் என்னைத் தெரிந்துகொண்டு மகிழ்வுற்ருர். சா. க.வையும் கண்டதில் அவருக்குப் பெருமகிழ்ச்சி. 'வாருங்கள், ஏதாவது சாப்பி டலாம்' என்று சிற்றுண்டிச்சாலைக்கு எங்களை அழைத்துச் சென்ருர். அவர் பெயர் ரமணன். அமெரிக்க ராணுவத்தில் அக்கவுண்டண்டாக வேலை பார்க்கிறவர். கலைமகளே வாசிக்கிறவர். 'ஏர் இந்தியாவில் சாமி என்ற தமிழர் இருக்கிருர். அவரை அறிமுகப்படுத்துகிறேன்' என்று சொன்னர். அவருடன் சென்று சிற்றுண்டி உண்டு, ஏர் இந்தியா அலுவலகம் வந்தோம். பிராங்க்பர்ட்டில் சுமக்க முடியாமல் சாமானச் சுமந்தபோது உண்டான விரக்தி இப்போது குறைந்துவிட்டது. அன்பர் ராமசந்திரன் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. -

சென்னை வந்த பிறகு உண்மை தெரிந்தது. அன்பர் ராமசந்திரன் மிகவும் வருத்தப்பட்டுக் கடிதம் எழுதி யிருந்தார். நான் அவருக்கு எமுதிய கடிதம் அவருக்கு உரிய காலத்தில் போய்ச் சேரவில்லை. காங்கள் 27ஆம் தேதி பிராங்க்பர்ட் போனேம். மறுநாள் அவருக்கு என் கடிதம் கிடைத்திருக்கிறது, எப்படியும் நாங்கள் சூரிச் போவோம் என்று எண்ணி, மறுநாள் விமான கிலேயத்துக்கு வந்அதி பார்த்து ஏமாந்து போனராம். நாங்கள் அவரைக் காணுமல் ஏமாற்றம் அடைந்தோம். அவரோ எங்களேக் காணுமல் ஏமாந்தார். இந்தச் செய்தியைத் தெரிவித்து மிகவும் வருந்திக் கடிதம் எழுதினர். நான் நிகழ்ந்தவற்றை எழுதி அவர் அன்பைப் பாராட்டிப் பதில் இறுத்தேன். .