பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

> * ٥,

  • Y. :rः او به
  • 54 வத்திகன் பெருங்கோயில்

ஆயிரம் பேர்களே உள்ள ஊர். அதற்கு ஒர் அரசாங்கம்: கவர்னர் ஆட்சிப் பீடத்தில் உள்ள தலைவர். அந்த ஊரே ஒர் ராஜ்யம். அங்கே தனி நாணயம் உண்டு; தபால் முத்திரைகள் உண்டு.

இது வேடிக்கையாக இருக்கிறதல்லவா? ரோமா புரியைச் சார்ந்துள்ள வத்திகன் நகரம் அத்தகையது. அது தனி நகரம்; தனியரசு; அதன் தலைவர் போப் ஆண்டவர். அவர் உலக முழுவதும் பரவியுள்ள ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் பெருந்தலைவர் பெரிய சமய குரு. அவரே வத்திகன் அரசுக்குத் தனித் தலைவர். அந்த நகரத்தின் நிர்வாகப் பொறுப்பை வகிக்கும் கவர்னர் ஒருவரும் இருக்கிருர்.

வத்திகன் நகரில் நடுநாயகமாக விளங்குகிறது. ஸெயிண்ட் பீட்டரின் திருக்கோயில் அதையும் அதனோடு சார்ந்த இடங்களையும் பார்த்து மகிழ்வதற்காக நாள் தோறும் ஆயிரக்கணக்கில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்களும், உலகம் சுற்றும் உல்லாசப் பயணிகளும் வந்தவண்ணமாக இருக்கிருர்கள். அவர்களே அழைத்து வரும் கார்களும் பஸ்களும் எங்கும் தோற்றமளிக்கும். ஜே ஜே என்று கூட்டமும் வாகனங்களும் இருப்புதைப் பர்த்தால் இது மாநகர் என்றே சொல்லத் தோன் றும். ஆஞல் அத்தனை கூட்டமும் அங்கே வந்து போகிறவர்களின் கூட்டந்தான். .