பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 புகை காட்டும் முடிவு

எங்களுடைய வெளிநாட்டுப் பயணம் கிறைவேறும் தறுவாயில் இருந்தது. ரோமிலிருந்து ஸ்விட்ஜர்லாந்து, எகிப்து ஆகிய நாடுகளுக்குச் செல்லவேண்டும் என்ற விருப் பம் முன்பு இருந்தது. அந்த அந்த காட்டுக்குப் போவதற். குரிய விஸாக்களையும் வாங்கியிருந்தோம். என்ருலும், போதிய வசதியின்மையில்ை ரோமாபுரியோடு இந்தப் பயணத்தை முடித்துக்கொள்வதாக நானும் நண்பர் திரு, சா. கணேசனும் தீர்மானித்தோம். -

ரோமாபுரியிலும் அதைச் சுற்றிலும் உள்ளகாட்சிகளைக் காட்டுவதற்கு அழைத்துச் செல்லும் கோச்சுகள் வெவ்வேறு மார்க்கத்தில் தனித் தனியே இருந்தன. அக்த மார்க்கத்தில் இன்ன இன்ன இடங்களைப் பார்க்கலாம் என்று வகுத்திருந் தார்கள். காங்கள் இரண்டு வேறு கோச்சுக்களில் சென்று இரண்டு நாட்கள் பார்த்தோம். ரோமிலிருந்து புறப்படு வதற்கு முதல் நாள் (30-7-1970) மூன்ருவது மார்க்கத் தில் சென்ருேம், வத்திகன் நகருக்குத்தான் சென்ருேம். ஸெயின்ட் பீட்டர் திருக்கோயிலே அடுத்துள்ள பல இடங். களைப் பார்த்தோம். -

ஓரிடத்தில் உள்ள சுழல்படியில் ஏறி மேல் உள்ள ஓவிய சாலை, பூகோளசாலை, நூல் கிலேயம், விஸ்டைன் சேபல், அங்குள்ள போப்பாண்டவரின் தேர்தல் அரங்கம் முதலிய வற்றைப் பார்த்தேன். • ,

வாடிகன் மியூஸியத்துக்குக் கீழேயிருந்து வளைந்து

வளைந்து வட்டமாகச் செல்லும் நீண்ட பாதையில் சென்