பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 கண்டறியாதன கண்டேன்.

பணத்தை நாங்கள் கொடுக்கவேண்டுமென்றும் ஹோட்டல், காரர்கள் சொன்னர்கள். அன்பர் கணேசனுக்குக் கோபம் வந்துவிட்டது. "எங்கள் பசிக்கு உணவு உண்பதா? பட் டைச் சாதக் கணக்குப் போடுகிறமாதிரி பணத்தைக் கணக் கிட்டு உணவு உண்பதா? இதை முன்பே ங்ேகள் என் தெரி விக்கவில்லே? நாங்கள் ஏர் இந்தியாவின் விருந்தினர்கள்' என்று எடுத்துக் கூறின. பிறகு அவர்கள் சும்மா இருந்

கார்கள். - -

பம்பாயிலிருந்து மாலை 6-15க்குத்தான் எங்களுக்கு விமானம். அதில் ஏறி 7.45க்குச் சென்னை வந்து சேர்க் தோம். உறவினர்களும் நண்பர்களும் விமான கிலேயத் துக்கு வந்திருந்தார்கள். இதுவரையில் ஒன்ருகவே இருந்த கண்பர் திரு சா. கணேசன் தம்முடைய நண்பருடன் புறப்பட்டார். நான் அவரிடம் விடைபெற்று எங்கள் வீட்டை நோக்கிப் புறப்பட்டேன்.

வீட்டில் வந்து என்னே விசாரித்தவர்கள் பல பேர், "என்ன வாங்கி வந்தீர்கள்?’ என்றுதான் கேட்டார்கள். "என்ன கண்டீர்கள்? என்ன என்ன கடந்தது?" என்று, கேட்பவர்களேவிட, 'என்ன அரிய பண்டங்கள் வாங்கி வந்தீர்கள்?’ என்று கேட்பவர்களே மிகுதி. அவர்களுக்கு, மற்ற நாடுகளிலெல்லாம் சாமான்கள் மிக மலிவாகக் கொட்டிக் கிடப்பது போலவும், நம்மிடத்தில் ஏராளமாகப் பணம் இருக்கிறது போலவும், அங்கிருந்து பல சாமான்களே. வாங்குவதற்காகவே பயணம் செய்ததுபோலவும் தோன்றும் போலும் அல்லது, அப்படியும் சில பேர் கண்ட கண்ட சாமான்களே வாங்கி வருவார்கள் போலும்! அவ்ர்கள் சுங்கச் சாவடியில் அகப்பட்டுக்கொண்டு விழிக்கிறதை இவர்கள் பார்த்தால், சும்மா கையை வீசிக்கொண்டு வருவதுதான் சரி. என்று தோன்றும்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு பாரிஸில் கடக்காவிட். டால் இந்த வெளிகாட்டுப்பயணம் எனக்குக்கிடைத்திராது