பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- போகம், யோகம், வேகம்! 53.

எங்களைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டிய இளைஞர் தம்பிக்கு உற்சாகம் குறைந்து விட்டது. வேறு பல இடங்களுக்குப் போக்லாம் என்று அவர் எண்ணி யிருக்கலாம்; அல்ை அவருடைய தோழர் மருந்துக்கடை யில் பண்ணிய காரியம் அவருக்கு மிகவும் அவமானத்தை உண்டாக்கிவிட்டது. 'இப்படிச் செய்வானென்று கினைக்க வில்லை! இப்படிச் செய்வானென்று கினைக்கவில்லை!" என்று பொருமினர். எங்களுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. கடைசியில் தம்பி எங்களை எங்கள் ஹோட்டலில் விட்டு விட்டு விடைபெற்றுச் சென்ருர். அவருடன் வந்த மற்ருெரு மாணவரை அப்பால் நாங்கள் எங்கும் பார்க்க வில்லை.

அதற்குமேல் எங்கும் போக எங்களுக்குப் பிடிக்க வில்லை. நான் ஒரு காகிதப் புட்டியில் விற்ற பாலை 1 பிராங்க் கொடுத்து வாங்கினேன். அதில் நாலு கப் பால் இருக்கும். இங்கெல்லாம் பால் கெட்டியாக இருக்கிறதற்கு, கள்ளிச் சொட்டுப்போல இருக்கிறது என்று உவமை கூறுவார்கள். இங்கே அது பேச்சளவில்தான் இருக்கிறது; புலவர்கள் சொல்லுகிற உவமையைப்போல வெறும் உயர்வு நவிற்சி யாகவே இருக்கிறது. ஆனல் அங்கே பால் கள்ளிச் சொட் டாகவே இருந்தது. அதைச் சாப்பிட்டே பல நாட்கள் ஒட்டி விடலாம் என்று தோன்றியது. நான் கொண்டுசென்றிருந்த அவலே அந்தப் பாலில் ஊறப்போட்டு உண்டேன். தமிழ் காட்டு அவலும் பாரிஸ் மாநகரத்துப் பாலும் கன்ருகவே இணேந்து ஊறிச் சுவையாக இருந்தனl -

மறுநாள் செவ்வாய்க்கிழமை; ஜூலை மாதம் 14-ந்தேதி, அன்று பிரான்ஸில் சுதந்தரத் திருநாள்: தேசீயத் திருவிழா. அன்று நகரமெல்லாம் ஒரே கோலாகலமாக இருக்குமென்றும் சாம்ப எலிஸிஸ் என்ற இடத்தில் பேரணிக்காட்சிகள் நடை பெறுமென்றும் சொன்னர்கள். இரவில் நகரத்தில் பல இடங்களிலும் வாண வேடிக்கைகள் நடக்கும். வீதியிலே.