பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 புறப்பட முடியுமா?

திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பத்திரிகை படித்துக்கொண்டிருந்தேன். காலை வேளே. வழக்கம்போல அன்பர் திரு சிங்காரம் தம் கையிலுள்ள கூடை நிறைய மலர்களைப் பறித்துக்கொண்டு வந்து கின்ருர்; எங்கள் வீட்டிலும் மலர் பறிக்க வந்தவர் அவர். கல்கத்தாவில் உயர்ந்த வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர். அப்போது விரைவுத் தபாலில் தபால்காரர் ஒரு கடிதம் கொண்டு வந்து கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்தேன். எனக்கே வியப்பாக இருந்தது. தந்தி வார்த்தையில் கடிதம் இருந்தது. 'பாரிஸில் கூட இருக்கும் மூன்ருவது உலகத்தமிழ் மகா காட்டிற்குச் செல்லும் குழுவில் உங்களையும் ஓர் உறுப்பின ராகச் சேர்க்கத் தமிழக அரசு தீர்மானித்துள்ளது. உங்களுடைய இசைவைத் தெரிவிக்க வேண்டும்' என்று இருந்தது. அன்று தேதி, 23-5-1970.

இந்தக் கடிதம் வருவதற்குச் சில நாள் முன்புதான் கலைமகள் ஜூலே இதழுக்கு ஒரு கட்டுரை எழுதினேன். அதில் ஒரு செய்தியைக் குறிப்பிட்டிருந்தேன். 'எல்லா வற்றையும் பார்த்துவிட வேண்டுமென்று நான் ஆசைப் படுவதில்லை. பார்க்க முடிந்தவற்றை கன்ருகப் பார்ப்பேன். முடியாதவற்றைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. நான் லண்டன் பார்த்ததில்லை; நியூயார்க் பார்த்ததில்லை. இப்படி எத்தனையோ நகரங்களைப் பார்த்ததில்லை. பார்க் காதவையே பல. ஆகவே எல்லாவற்றையும் பார்ப்ப தென்பது யாருக்கும் முடியாத காரியம்' என்று எழுதி