பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“76 கண்டறியாதன கண்டேன்

அப்படியே பிறநாட்டு மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பயிலவேண்டுமென்றும், இந்தப் பரிமாற்றத்தால் நன்மை உண்டாகுமென்றும் கூறி. மாநாடு நன்கு நிறைவேற

வேண்டும் என்று வாழ்த்தினர்.

முதல்நாள் அன்று பிற்பகலில் கல் வெட்டு, தொல் பொருள் துறை பற்றிய ஆராய்ச்சி நடைபெற்றது. அப்போது முதலில் டாக்டர் அஸ்கோ பர்ப்போலா (Dr. Asko Parpola) argårLair Gust@fr. egalir டென்மார்க்கு நாட்டில் கோபன்ஹேகனில் உள்ள ஸ்காண்டினேவியன் ஆசிய ஆராய்ச்சிச் சாலையைச் (Scandinavian Institute of Asian Studies) firirişgasir. அவர் ஸிந்துவெளியில் கிடைத்த எழுத்துக்களைப் பற்றி ஆராய்ந்த பின்னிஷ் ஆராய்ச்சிக் குழுவில் ஒருவராக இருந்தவர்.

கோபன்ஹேகனில் ஒரு பெரிய நூல் கிலேயம் இருக்கிறது (Royal Library). அதைப் பதினேந்தாவது நூற்ருண்டில் நிறுவினர்கள். கீழ்நாட்டு மொழிகளில் உள்ள நூல்களும் சுவடிகளும் 2,75,000 அங்கே இருக் கின்றன. அவற்றில் பல தமிழ் மொழியில் உள்ளவை. திருக்குறளே எழுதிய ஏட்டுச் சுவடி ஒன்றும் அங்கே இருக்கிறது. 133 ஏடுகள் அடங்கிய சுவடி அது.

பின்லாந்து ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழுவினர் ஸிந்துவெளியில் கிடைத்த பண்டங் களில் பொறித்துள்ள எழுத்துக்களைக் கம்ப்யூட்டரின் உதவியைக்கொண்டு பல மாதங்களுக்கு முன் ஆராய்க் தார்கள். அவர்களுடைய விளக்கம் முன்பு இந்த நாட்டுப் பத்திரிகைகளில் வெளியாகியது. அது திராவிட இனத்தைச் சேர்ந்த மொழி என்றும், அந்தப் பழங் காலத்தில் சாதிப் பாகுபாடு இருந்தது என்றும் அந்த விளக்கம் கூறியது. அந்த ஆராய்ச்சிக் குழுவைச் சேர்க் தவர் டாக்டர் பர்ப்போலா. அவர் ஸிந்து வெளியிற் கண்ட