பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கண்டறியாத்ன கண்டேன்

வார்கள். அது அவர்கள் வழக்கம். விருந்து வழங்கும் இடங்களிலும் சரி, உணவுச் சாலைகளிலும் சரி. நமக்கு நல்ல தண்ணிர் வேண்டுமென்ருல் அன்புடன் வழங்குகிருர்கள். 'மதுவைத்தான் அருந்த வேண்டும்' என்று யாரும் வற்புறுத்துவதில்லை. மதுவைப் பருகாமல் தண்ணீரை ஆவலுடன் உறிஞ்சுபவர்களைப் பார்த்துப் பரிகாசமும் செய்வதில்லை. -

அந்த விருந்தில் திரு ஆதிசேஷையா யுனெஸ்கோவின் வரலாற்றைச் சொன்னர். -

ஐக்கிய நாட்டுச் சபையின் கல்வி விஞ்ஞானப் Lorum' () sā playgrih -93. (United Nations Educational Scientific and Cultural Organization.) -sigli பெயரையே சுருக்கி யுனெஸ்கோ என்று வழங்குகிருர்கள். யுனெஸ்கோ நிறுவனம் ஏழு மாடிகள் உள்ள பெரிய மாளிகையில் இருக்கிறது. 1955-ஆம் ஆண்டில் இதைக் கட்டத் தொடங்கி 1958-இல் முடித்தார்கள். ஆங்கில எழுத்தாகிய y என்பதன் வடிவில் இந்த மாளிகை அமைந்திருக்கிறது. உலகிலுள்ள பல நாட்டுச் சிற்பிகளும் சேர்ந்து இதை உருவாக்கினர்கள். கிலத்துக்கு அடியிலும் இ தன் தளங்கள் உள்ளன. மேல் அடுக்குகளில் உவவனம் இருக்கிறது.

125 நாடுகள் சேர்ந்து கட்டிய மாளிகை இது. யுனெஸ் கோவின் பேரவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கடும்; தீர்மானங்களை உருவாக்கும். யுனெ ஸ்கோவின் நிர்வாகத்தை ஓர் ஆட்சிக் குழு கடத்தி வருகிறது. முன்பு நடந்த ஒரு கூட்டத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கூடம் நிறுவும் தீர்மானம் நிறைவேறியது. சென்னையில் அந்தக் கூட்ம் பணியாற்றும். யுனெஸ்கோ நிறுவனத் தின் சார்பில் பல நாடுகளிலும் உள்ள கிளைகளில் 2000 ஆடவரும் மகளிரும் பணி ஆற்றுகிருர்கள். இந்தியாவில் உள்ள இதுளயில் நாற்பது பேர் உள்ளனர். பாரிஸ் மாநகரத்தில் 1600 பேர் பணிபுரிகின்றனர். நூறு: காடுகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள்,