பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் நாள் விழா 79

கல்வெட்டுக்கள், செப்புப் பட்டயங்கள் முதலியன இந்த காட்டில் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்திய அரசினர் ஆட்சியில் உள்ள கல்வெட்டுத் துறையினர் 25,000 சாசனங்களை எடுத்திருக்கின்றனர். அவற்றில் 6000 சாசனங்களே அச்சிடப்பெற்றுள்ளன. இன்னும் படியெடுக்க வேண்டியவை பல. தமிழக அரசு இத்துறையில் தொண்டு செய்ய முன்வந்திருக்கிறது: தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்களையும் செப்பேடுகளையும் படியெடுத்து அச்சிடும் வேலையை மேற்கொண்டிருக்கிறது.

(இந்தத் துறையின் இயக்குநராக இருப்பவர் திரு ரா. நாகசாமி).

திரு நாகசாமி பல படங்களேத் திரையில் காட்டித் தம் கருத்தை விளக்கினர். அவருடைய உரை பலருக்கும் வியப்பையும் களிப்பையும் ஊட்டியது.

முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிவடைந்தன. அன்று இரவு யுனெஸ்கோவின் பொது இயக்குநர் திரு ஆதிசேவுையா தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு விருந்தளித்தார். விருந்தில் பல்சுவைப் பண்டங்களும் இருந்தன. மதுவும் ஊனுணவும் இருந்தன. நானும் நண்பர் திரு சா. கணேசனும் திரு சுந்தரவடிவேலுவும் வேறு சிலரும் சுத்த சைவ உணவு உண்பவர்கள். எங்களுக்கு உரியவை இவையென்று தேர்ந்தெடுத்துப் பரிமாறினர்கள், கான் புறப்படும்போது அச்சுறுத்திய அன்பர்களின் எச்சரிக்கைகளே அப்போது கினைத்துக்கொண்டேன். விருந்துகளில் காம் வேண்டியதை உண்ணலாம்; வேண்டா ததை மறுக்கலாம். பழம், பால், ரொட்டி, காய்கறிகள் கிறைய வழங்குகிருர்கள். "அங்கே தண்ணிரே தரமாட்டார்கள். மதுவைத்தான் பருக வேண்டும்" என்று யாரோ சொன்னர்கள். அது ஒரு விதத்தில் உண்மை, அதாவது மேல்நாட்டுக்காரர்கள் உண்ணும்போது தண்ணிரைப் பருகுவதில்லை; அடிக்கடி மதுவை உறிஞ்சு