பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கண்டறியாதன கண்டேன்

தார்கள் என்று சொல்வதற்கில்லை. தமிழர்கள் அதை விரும்பி வரவேற்ருர்கள். அதனல் தமிழும் வடமொழியும் அருகருகே வளர்ந்தன. இருபது நூற்ருண்டுகளாக இரு மொழிகளிலும் வல்ல புலவர்களால் இரண்டு மொழிகளும் வளம் பெற்றுள்ளன.

திரு பிலியோஸாவுக்குப் பிறகு பேராசிரியர் வீக்ப்ரிட் 6F6äraptorG) (Prof. Siegfried Lienhard) Gréör auf “s@Gor பொருளும் வடமொழி முக்தகப் பாக்களும் என்பது பற்றிப் பேசினர். அவர் ஸ்வீடன் நாட்டில் ஸ்டாக்ஹோமில் உள்ள பல்கலைக் கழகத்தில் இந்திய மொழியாராய்ச்சித் துறைத் தலைவராக இருப்பவர். அந்தப் பல்கலைக் கழகத்தில் தமிழ்மொழி, தமிழ் நாகரிகம் ஆகியவை பற்றிய படிப்பும் பாடத் திட்டங்களில் ஒன்ருக இருக்கிறது.

தனித் தனியே பொருள் முடிந்தமைந்த அகப்பொருட் காதற் பாடல்களில் வரும் காதலுணர்ச்சியை வடமொழி முக்தகப் பாக்களிலும் காணலாம் என்பதை அவர் விளக் கினர். அவருக்குப் பின் பூரீமதி முத்துக்குமாரு சீவக. சிந்தாமணிப்பாத்திரங்களைப்பற்றி உரையாற்றினர். கத்திய சிந்தாமணி என்ற வடமொழி நூலிலிருந்து பல கருத்துக் களைச் சீவக சிந்தாமணி ஆசிரியர் ஆண்டிருக்கிருர் என்றும், சிந்தாமணியின் காலம் 10ஆம் நூற்ருண்டாக இருக்கலாம். என்றும் அவர் தெரிவித்தார். ! -

பிறகு புதுவை மாகில முதல்வர் திரு பரூக் மரைக்காயர், "புதுவையும் பிற நாட்டுத் தொடர்பும் என்னும் உரையை வழங்கினர். அவர் உரையில் கேட்ட சில முக்கியமான கருத்துக்கள்:

ரோமர்கள் தங்கள் தொழிலகங்களில் அடித்த நாணயங்கள் புதுச்சேரியில் வழங்கி வந்தன. ஏறத்தாழ 2,200 ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரியை யவனர்கள் புதுக்கே என்று அழைத்தனர். புதுக்கே என்று வழங் கியது அருகன் மேட்டுப் பகுதியேயாகும். கி. பி. 60-ஆம் ஆண்டில் பெரிபுளுஸ் என்ற யவன ஆசிரியர் எழுதிய