18 ஆரிய பூமியை ஆண்ட மன்னர்கள் அனந்தம்பேர். அத்தனை மன்னர்களும் நம் தமிழ் மூவேந்தர்களின் வாள்வலிக்குத் தோற்றவர்கள். கப்பம் செலுத்திக் காலம் தள்ளும் காவலர்கள். படைகள் ஆரிய பூமி வழியே இமாலயம் செல்லத் தயாரிக் 27 கப்பட்டு விட்டன. சேரன் செங்குட்டுவன் கல்லெடுக் இமாலயம் வருகிறான்! ஆரிய நாட்டு மன்னர்கள் கப்பத்துடன் வழியில் காத்திருக்கவும் என, மூவேந்தர்களின் சின்னமாகிய வில், கயல், புலி பொறித்த ஏட்டிலே தீட்டப்பட்டது நிருபம் அப்பொழுது அங்கு அருகில் நின்றிருந்த பறை அறைவோரைப் பார்த்து அழும்பில்வேள் சொன்னான்: “நம் தலைநகரான இவ்வஞ்சி நகரின் வாயிற்புறத்தே நிரம்பி இருக்கும் வெளி நாட்டு வேந்தர்களின் தூதுவர்கள் காதுகளில் படும்படியாக நம் நிருபத்தின் சாரத்தைப் பறை முழக்கி அறைவியுங்கள், அவர்கள் மூலம் நம் நிருபச் செய்தி ஆரிய பூமியினருக்கு வெகு விரைவில் தெரிந்துவிடும்" என்று. 6 ....... இமய மால்வரைக்(கு) எங்கோன் செல்வது கடவு ளெழுதவோர் கற்கே யாதலின் வட டதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம் தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி மண்டலை யேற்ற வரைக வீங்கென நாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்று நம் காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா வம்பணி யானை வேந்தர் ஒற்றே தஞ்செவிப் படுக்குந் தகைமைய வன்றோ அறைபறை யென்றே அழும்பில்வே ளுரைப்ப..." (வஞ்சிக் காண்டம் காட்சிக் காதை 168-177) இன்றைய நாகரிகச் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் தூதுவர்' முறை பல தலைமுறைக்கு முன்பே தமிழர் சமுதாயத்தினரால் கையாளப்பட்டது! நகருக்கு வெளிப் புறத்தே வேற்று நாட்டுத் தூதுவர்க்கு இடம் தந்து, நகரின் முக்கிய நிகழ்ச்சிகளைப் பறை அறைவதின் மூலமாக அவர்கட்கு
பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/19
Appearance