உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 உணர்த்தி, அது அவர்கள் தாய் நாட்டிற்கு விரைவில் எட்டச் செய்து வாழ்ந்தான் பண்டைத் தமிழன். இந்தப் பழந்தமிழர் களின் பழக்கம்தான் மேலை நாட்டுக்குச் சென்று நகருக்குள் ளேயே வெளிநாட்டுத் தூதுவர்க்கு அலுவலகமும் நாட்டின் முக்கிய நிகழ்ச்சியின் போது கலந்து கொள்ள அழைப்பும் என்ற அளவிற்கு வளர்ச்சி பெற்று, 'அம்பாஸிடர்' என்ற ஆங்கிலப் பெயரும் தாங்கி இருக்கிறது. இதை நம் நாட்டு மொழி பெயர்ப்பாளர்கள் "ஸ்தானிகர்" என்றும் தூதுவர்" என்றும் மொழி பெயர்த்தும் தந்தார்கள். கொல்லை விளை பஞ்சு நெசவாளன் கை வண்ணத்தால் புடவையாகி நம் உள்ளத்தைக் கவர்வது போல. 'தூதுவர்' என்றழைக்கப் படும் பழந்தமிழ் ஒற்று முறையும், நம்மை 'ஆங்கிலச் சரக்காக' மயக்கி விட்டது! இதைப் போன்ற இன்னும் பல அரிய சம்பவங்கள் தமிழிற்கும், தமிழர்கட்கும் பெருமை தரக் கூடியது--நம் பழந்தமிழ் நூல்களில் விரவிக் கிடப்பதைக் காணலாம். (கோவையிலிருந்து வெளிவந்த வசந்தம் எனும் திங்கள் ஏட்டில் (1916ல்] வெளிவந்தது,