உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தி வேண்டும் நூற்றுக்கு நூறும் பகுத்தறிவுடைய மக்களைக் கொண்டு இயங்கிய நாடு என்று, உலகத்தில் எந்த ஒரு நாடுமே இருந்ததில்லை -இன்றும் இல்லை-இனியும் ஏற்பட முடி யாது! ஆனால், பக்தியுடைய மக்களைக் கொண்ட நாடுகள் உலகில் பல இருந்திருக்கின்றன. இன்றும் இருக்கின்றன. அமெரிக்காவிலோ, ரஷ்யாவிலோ, இங்கிலாந்திலோ தேசப்பக்தி இல்லாத ஒரே ஒரு நபரைக்கூடக் காண இயலாது. வங்காளிகளுக்கிருக்கிற மொழிப் பக்தி இந்தியாவில் வேறு எந்த இனத்தவர்கட்குமே இல்லை. மலையாளிகளுக்கிருக்கிற இனப்பக்தி தனிச் சிறப்புடைய தாகும். இன்றைய தமிழகத்திலோ தேசப்பக்தி, மொழிப்பக்தி இனப்பக்தி ஆகிய எது ஒன்றும் முழுமையாக இல்லை ! ஆனால், இல்லை என்று சொல்லிக் கொள்ளவும் நாம் தயா ராக இல்லை. எனவே போலி தேசபக்தி, போலி மொழிப் பக்தி, போலி இனப்பக்தி தலைவிரித்தாடுகின்றன. பண்டைய தமிழர்கட்கு தேசப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று, மதப்பற்று எல்லாமே இருந்தன. ஆராய்ச்சித் திறமையுமிருந்தது. அதனாலேயே அவர்கள் அடிமை வாழ்வின்றிச் சுதந்திர மக்களாக வாழ முடிந்தது. விநோதக் களியாட்டங்களைக் கூட பண்டையத் தமிழர்கள் தங்களின் தேசப்பற்றுதலை- அரசியல் பக்தியை வெளியிடவே கொண்டாடினார்கள் என்று கூறினால் மிகையாகாது ! ஆண்கள் மட்டுமல்ல, பெண்கள் கூட தேசபக்தியுடையவர்களாகவே வாழ்ந்தார்கள். அவர்கள் ஆடும் ஆட்டங்களிலும், பாடும் பாட்டுக்களிலும் தேசச்