22 கடவரைக ளோரெட்டுங் கண்ணிமையா காண வடவரைமேல் வாள்வேங்கை யொற்றினன்யா ரம்மானை வடவரைமேல் வாள்வேங்கை யொற்றினன்றிக்கெட்டுங் குடைநிழலிற் கொண்டளித்த கொற்றவன்காணம்மானை கொற்றவன்றன் பூம்புகார் பாடேலோ ரம்மானை. 4 . அவர்கள் பாண்டிய நாட்டுப் பெண்கள் பந்தாடுகிறார்கள். பந்தாட்டப் பாடலிலும் வீட்டுச் செய்திகள் இடம்பெறவில்லை. நாட்டுப் பாட்டே மிளிர்கிறது. ‘பூங்கொடியே, பொன் மாலைகள் மின்னிட, மேகலைகள் தாள ஒலியுடன் ஒலித்திட, நாம் எங்கும் ஓடியாடி பந்து விளையாடுவோம், அப்படிப் பந்தாடும் போது, தேவர்களால் வழங்கப்பட்ட மாலையை அணிந்த நமது தென்னவன் (பாண்டியன்) வாழ்க வாழ்க என்று சொல்லிப் பந்தாடுவோ மாக!" பொன்னிலங்கு பூங்கொடி பொலஞ்செய்கோதை வில்லிட மின்னிலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப எங்கணும் தென்னன் வாழ்க வாழ்க என்று சென்றுபந் தடித்துமே தேவரார மார்பன் வாழ்க வென்றுபந் தடித்துமே. சேர நாட்டுப் பெண்கள், வளர்ந்த தருக்களின் கிளைகளில் வடம் கட்டி ஊஞ்சலாடுகிறார்கள். அந்த ஊஞ்சல் ஆட்டத் திலும் இசை நயத்துடனும் தாள லயத்துடனும் பாட்டு எழு கிறது! அந்தப் பாட்டில்- 6. 6. தமிழர்களை இழித்துரைத்த யவனர்களை அடக்க எழுந்த போரில் வில், புலி, மீன் சின்னமாகிய தமிழகத்தின் பொதுச் சின்னத்தை எடுத்துச் சென்றவனும், இமய முதல் குமரி வரை யில் ஆட்சி செலுத்தியவனுமான நமது சேர மன்னனின் திறம் பாடி இடை வருந்த ஊஞ்சல் ஆடுவோம். இந்த மன்பதை காக்கும் நமது சேர மன்னனின் கையிலும், கொடியிலும் இலங்கு வில்லின் திறம் புகழ்ந்து பாடி ஆடுவோம் ஊஞ்சல் நாம் ஆடுவோம் ஊஞ்சல் என்று ஆடுகிறார்கள். ' 8 D
பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/23
Appearance