உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 வன்சொல் யவனர் வளநாடு வன்பெருங்கல் தென்குமரி யாண்ட செருவில் கயற்புலியான் மன்பதை காக்குங் கோமான் மன்னன் திறம்பாடி மின்செய் இடைநுடங்க ஆடாமோ வூசல்? விறல்வில் பொறிபாடி ஆடாமோ வூசல். இப்படிப் பாடுவதிலும், ஆடுவதிலும் நினைப்பிலும் செய லிலும் தன் நாடு, தன்னினம், தன் மொழி என்ற உணர்வைக் கொண்டவர்களாக நமதுமுன்னோர்கள் வாழ்ந்தார்கள். அதனா லேயே அன்றையத் தமிழகம் உலகின் முன்பு உயர்ந்த நாடாக. புகழ்மிக்க நாடாக, பொருள் வளமிக்க பூமியாக கற்றோர் களையும், கவிவாணர்களையும், வீரர்களையும் கொண்டு திகழ்ந்தது. இன்றோ நம் தமிழர்கட்கு, இன-மொழி-நாட்டுப் பற்றுதலுமில்லை, பக்தியுமில்லை. இந்த நிலை மாற, நாம் நமது மக்களை தேச பக்தர்களாக,மொழி பக்தர்களாக, இனப் பற்றுதல் உடையவர்களாக ஆக்கிட வேண்டும். இதையே நமது இலக்கியங்கள் நினைவூட்டுகின்றன. குறிப்பு:- பாடல்கள் சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதையி லுள்ளவை. ST 600T-18, 20, 25. 9 1 11-1959 "சாட்டை" எனும் கிழமை ஏட்டில் வெளிவந்தது.