உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தோழி, மழைபோன்று இன்பம் பொழியும் பழமை யான நமது நல்ல ஊர் உறங்குவதேயில்லை. குடிமக்கள் தூங்கி விட்டாலும், கடைத்தெருவிலே வியாபாரிகள் விழித் திருந்து காரியம் பார்த்த வண்ணமாயிருக்கின்றனர். வியா பாரிகள் உறங்கி விட்டார்கள் என்று நினைக்கும் போது, பருவ மங்கையரைக் கடுமையாகக் கண்காணிக்கும் தாய் மார்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். தாய்மார்கள் தூங்கிவிட்டார்கள் என்று எண்ணும் போது நகரைச் சுற்றிக் காவல் காத்து வரும் வேல் படையினரின் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கிறது. அவர்களும் உறங்கி விட் டார்களென்று மகிழ்ச்சியுறும்போது நாய்கள் விழித்தபடி பாடி மகிழ்கின்றன. நாய்களின் அரவம் அடங்கினால் பகல்போல் வெளிச்சத்தைத் தருகின்ற நிலவு வந்து விடு கிறது. நிலவு மறைந்தால் கூகைகளின் பேயிரைச்சல்! அது அடங்கினால், "பொழுது புலர்ந்தது எழுமின்” என்ற கோழியின் பேரொலி ! அந்த ஒலி அடங்கினால் ஊர் நடமாட்டம் தொடங்கி விடுகிறது! ஊர் மக்களின் நடமாட்டம் தொடர்ந்தாலும், தொடராவிட்டாலும், மக்களின் 6 இரவு முழுதும் கண் விழித்திருப்பதால் நமது தலைவர் அதிகாலையில் கண்ணயர்ந்து விடுகிறார் ! என்ன செய்வது? எப்படி அவரின் சந்திப்பு நமக்குக் கிட்டுவது? உறந்தை நகரின் காவலைக் கடந்து அவ்வூரை எதிரிகள் கைப்பற்ற எண்ணுவது எவ்வளவு அரிதோ அவ்வளவு அரிதாக அரிதாக முடி கிறது, நமது ஊர் உறங்கி நாம் நமது தலைவரைச் சந்திப்பதும்” என்று கூறி ஏங்குகிறாள் தலைவி. களவுக் காதலை ஊர் உறங்கா நிலை தடுக்கின்றது. உறந்தை யின் அரண்களின் காவல் அந்நகரை எதிரியிடமிருந்து காக் கின்றது! ஒரு பெண்ணின் காதல் துடிப்பை வைத்து ஒரு நகரின் அரணமைப்பைச் சொல்லி விட்டார் பாணர். இது சங்காலப் புலவர்களின் மாண்பு உ 31-1-1980 "சாட்டை” எனும் திங்கள் ஏட்டில் எழுதியது.