உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் காட்டும் கதாபாத்திரம் எவ்வுலகும் வென்று இணையற்ற வீரன் எனப் புகழ் பெற்றவன் மாபலிச் சக்ரவர்த்தி. அவன் ஈகையால்-ஈந்தே- இறந்தான். தன் சாவாலும் அறம் காத்த அந்த வள்ளலின் வாய்மையைக் கம்பன் தன் இன்தமிழால் எடுத்தியம்பும் காட்சி தமிழிலக்கியத்தில் சாகா வரம் பெற்றது! குறளுரு வெடுத்து மாபலியின் அரசவைக்குள் யாசிப்போ னாக நுழைகிறான் திருமால். அந்த மாயத்திருவுரு ஏன் என்பதை மாபலியின் குரு பீடத்திலிருக்கும் சுக்கிரன் தன் அறிவின் திறத்தால் (ஞானத்தால்) அறிந்து கொண்டான். அதை மாபலிக்கு அவன் உணர்த்தும்முன்னம் மாபலி, குறுகிய உருவெடுத்தோன் முன் நடந்து, உயர்ந்தோனே வருக" என்று வரவேற்று நின்றான். “தர்மம் செய்து செய்தே கை நீண்டிருக்கும் வள்ளலே, உன்னிடம் தருமம் பெறாதவர்கள் இருந்தும் இறந்தவர்களே' என்றான் வினயமாக ஆசையை உள்ளடக்கிச் சிறிய உருவில் வந்த விஷ்ணு, வந்தவன் யாசிப்பவன் என்பதை உணர்ந்தான் மாபலி, "உமக்கு வேண்டியது யாவை? எனக் கேட்டான்.

  • ‘அதிகமில்லை, மூவடி மண்” இது நெடுமாலின் பதில்.

"வேண்டியதை அளித்தோம் பெற்றுச் செல்க' என்றான் புகழ் பெற்ற வேந்தன் மாபலி! திடுக்கிட்டான் சுக்கிரன், "என்ன காரியம் செய்தாய் மாபலி? இவன் மனிதனல்ல. இவ்வுலகையே உண்டு ஆலிலை யில் பள்ளிகொண்டவன், பாத்திரம் அறிந்து பிச்சையிடு, இல்லையேல் நீ அளித்த தர்மம் உன்னையே அழித்து விடும் என்று எச்சரித்தான். குரு தரும் அறிவுரை கேட்ட மாபலி,