36 கொஞ்சமும் நெஞ்சம் தளராது பெருமிதத்துடன் பதில் தந் தான். அவன் செப்பிய திருவாக்கியம் செந்தமிழாக தமிழின் பண்பாடாக - தமிழகத்தின் இதயமாக இவ்வுலகத்தோர் ஒப் புக் கொள்ளும் உன்னதக் கருத்தாக மிளிர்கிறது. ஆம், மாபலி யைப் பேசவைக்கும் கம்பன் கன்னித் தமிழனன்றோ? எனவே, தமிழரின் அறநெறியை மாபலியின் வாயால் ஓத வைத்து விட்டான். இதோ மாபலி பேசுகிறான். "இவனுக்குக் கொடு, இவனுக்குக் கொடுக்காதே" என்று கற்றோர் கூறுவதில்லை. நல்லவர்க்கே தர்மம் செய்ய வேண்டுமென்றால், இவனை விட நல்லவன் - மேலோன் - யார் இருக்கமுடியும்? துன்னினர் துன்னலர் என்பது சொல்லார் முன்னிய நன்நெறி நூலவர் முன்வந்து உன்னிய தானம் உயர்ந்தவர் கொள்க என்னில் இவன் துணை யாவர் உயர்ந்தார்? (வேள்விப்படலம்-28) தருமம் செய்ய வேண்டியது கடன். ஆனால் கூடாதென்ற கூற்றுத் தப்பு. நீர் வெள்ளி (ஏதும் அறியாதவன்) ஆனது பற்றி இவ்வாறு கூற முடிந்தது. மற்றையோர் இவ்வாறு கூறி டார். உயிரைக்கூட யாசித்தால் கொடுத்து விட வேண்டும். உயிர் வாழக் கூட யாசிக்கக் கூடாது, யாசிப்பது சிறுமைச் செயல். வெள்ளியை ஆதல் விளம்பினை மேலோர் வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால் எள்ளுவ என் சில இன்னுயிர் எனும் கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றாம் வேள்விப்படலம்-29) வாழ்பவர்களெல்லாம் வாழ்பவர்கள் அல்லர். இறந்து பட்டார்கள் என்று சொல்லப்படுபவர்களெல்லாம் இறந்தொழிந் தவர்களும் அல்லர். யாசித்து வாழ வேண்டிய நிலை வந்தும் சாகாதிருக்கிறார்களே அவர்கள்தான் சாவால் தழுவப்பட்ட
பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/37
Appearance