37 வர்கள். தர்மம் செய்த வள்ளல்கள் செத்து விட்டிருந்தாலும் சாகாதவர்களே! மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள், மாயாது, ஏந்திய கைக்கொடு இரந்தவர் எந்தாய், வீந்தவர் என்பவர் வீந்தவர் ஏனும் ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே? (வேள்விப்படலம்-30) சேர வரும் பழிச்செயலைச் செய்கிறவன் இருக்கிறானே அவன் கூட நமக்குப் பகைவன் அல்லன். ஆனால், ஒருவன் கொடுக்கும் போது கொடுக்காதே என்று தடுப்பவனிருக்கி றானே அவன்தான் பெரிய பகைவன். அவன் பிறரை மட்டு மல்ல தன்னையும் கெடுத்துக் கொள்பவனாக இருக்கிறான். அடுப்ப வரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர் கொடுப்பவர் முன்பு கொடேல் என நின்று தடுப்பவ ரேபகை தம்மையும் அன்னார் கெடுப்பவர். அன்னதோர் கேடிலை என்றான். (வேள்விப்படலம் - 31) - நாம் என்ன செய்கிறோம் என்பதை உணராது செய்கின்ற தர்மத்தைத் தடுக்கின்ற சுக்கிரனே, ஒருபொருளை ஒருவருக்கு ஈயும் போது குறுக்கே நின்று தடுப்பது தீதாகும். இந்தச் செய லில் நீர் ஈடுபடுவதின் மூலம் உம் குடும்பத்தினர், உணவுக்கும் உடைக்கும் அலையும் நிலையை ஏற்படுத்திக் கொள்கிறீர்! நாம் ஒருவருக்குக் கொடுப்பதைத் தடுத்தால், நமக்குக் கொடுக்கப்படுவதையும் இன்னொருவன் தடுக்கலா மன்றோ? எடுத்து ஒரு வர்க்கு ஒருவர் யீவதன் முன்னம் தடுப்பது நினக் கழகிதோ தகவில் வெள்ளி கொடுப்பது விலக்கும் கொடியோய் உன துசுற்றம் உடுப்பதுவும் உண்பதுவும் இன்றிவிடு கின்றாய்! இப்படிக் கூறி ஈவது என் கரம். ஏற்பது திருமால் கரம் என்றால், இதை விட நற்பேறு எனக்கு என்றுமே கிடைக்கப்
பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/38
Appearance