38 போவதில்லை. வரலாறு உள்ளளவும் மும்மூர்த்திகளில் ஒரு மாபலி என்ற பெருமை எனக்குக் முர்த்திக்கு ஈந்தவன் கிடைக்கவிருக்கிறது. "இந்தச் சூழலை நான் பயன்படுத்திக் கொள்ளல் வேண் டும். சுக்கிரப்பெரியீரே தடுக்காதீர் என் செயலை. பரமாத் மாவே, பெறுக நீர் மூவடி நிலம்" என்று கூறி, ஈரடியால் உலகளந்தோனுக்கு மூன்றாம் அடி வைக்கத் தன் தலையையே கொடுத்து வள்ளலாகி விட்டான் மாபலி. வாமனையும், மாபலியையும் முன்னிறுத்தி, சுக்கிரனின் துணை கொண்டு தர்மத்தின் தன்மையைத் தெளிவாக விளக்கி விட்டான் கம்பன். ஆம், அவன் அவையடக்கத்தில் கூறுவது போல், தனது தெய்வமாகவியின் திறத்தை ஒவ்வொரு கதாப் பாத்திரத்தின் வாயிலாகவும் விளங்க வைத்து விட்டவன் கம்பன் அவன் புகழ் அழிக்க முடியாதது; அழியாதது. 6 "தர்மம் செய்தவன் சாவதில்லை” என்று மாபலி வாயால் கூறும் கம்பன், தன் அறிவை, ஆற்றலை ஈந்து தமிழை வளர்த்த வள்ளல் அன்றோ? எனவே அவன் சாவா வரம் பெற்ற தமிழாகி விட்டதில் வியப்பேது? (2-10-1955) சாட்டை" திங்கள் ஏட்டில் வெளிவந்தது
பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/39
Appearance