உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கணவன் வந்தால் அன்றே தனது கணவனும் வந்துதானே ஆக வேண்டும். என்ற கருத்தில் "உன் கணவன் என்றைக்கு வருகின்றாராம்?" என்று கேட்டாள். அதற்கு அந்தக் குறும்புக்காரி,எல்லாம் உன் கணவன் வருகிற அன்றைக்கு தான் வருகின்றாராம்" என்று கூறி நழுவப் பார்த்தாள். வந்தவள் விடவில்லை. "என் கணவர்தான் என்று வருகின்றார். சொல்லேன்? "என் கணவர் வருகிற அன்றைக்கு!" 'உன் கணவர் எப்பொழுது வருவார்?" 'உன் கணவர் வருகின்ற போது! என்னடி விளையாடுகிறாய்? சொல்லுடீன்னா!" "விளையாடல்லே அம்மையே! விடிவதற்குள் இங்கே நமது நாட்டு வீரர்கள் அனைவரும் வந்து சேருவார்களாம்! போ, புருடனை வரவேற்கப் பூரண கும்பம் தயார் செய்யப் போடீன்னா!" இந்த வாக்கியத்தைக் கேட்ட அவள், தோள் பட்டையில் முகவாய்க்கட்டையை இடித்துக் கொண்டு, "ஆமா, அவரு வரலேன்னு தான் நான் பெரிய கவலையா இருக்கேனோ?" என்று நடித்து நடந்தாள். ஆனால் இதயத்திலே இனிப்பு கசிந்து உடலெல்லாம் தித்திப்பேற தன்னினைவிழந்து சென்ற அவள், முன்பு போல், எதிரில் வரும் பெண் மீது மோதிக் கொண்டாள்! மோதுண்டவள் சண்டைக்கு வருமுன் விஷயம் தெரியுமா உனக்கு? நமது நாட்டு வீரர்கள் இன்னும் சிறிது நேரத்திலே இங்கே வருகிறார்களாம்" என்று குறும்புடன் கூறி முடித்தாள். "நிசமாகவா” என்று கேட்டு, 'ஒப்பனை செய்து கொள்ளக்கூட நேரமில்லையே' என்று மனத்தினுள்ளாகவே முனகியபடி வேகமாக நடந்தாள் அவள். இந்தச் செய்தி, ஊர் முழுவதும் பரவிற்று! ஊர்ப்பெண்கள் அனைவருமே தத்தமது கணவர்களை வரவேற்கத் தயாரானார் கள். சிறு ஓசை கேட்டாலும் தெருவில் ஓடிநின்று பார்ப்பவரா