உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 போக்கில் நடக்கத் துணிந்தமை கண்டு பொறாதவராக அதைத் தடுக்க எண்ணி, மக்களைப் பார்த்து இவர் கூறு கிறார். . "நாட்டில் வறுமை மிஞ்சி விட்டது, எங்கும் தனிவுடமை வாதிகள் பெருகிவிட்டார்கள். மன்னர்கட்கோ பொருளாசை பெருகிவிட்டது. அதன் விளைவாக ஒரு வீட்டில் சாவுப் பறையும், இன்னொரு வீட்டில் மங்கல முழவும் முழங்கக் கேட்கிறோம். ஒரு வீட்டில் சிரிப்பொலி மிகுவதும், வேறு ஒரு வீட்டில் அழகை ஒலி எழுவதும் இயல்பாகிவிட்டன. பொருளாசை போர்ப் பறையை முழக்குகிறது. அதனால் பலர் மாண்டு மடிகின்றனர். இறந்தோனின் இல்லத்தில் பூச்சூட லையும் பூணணிகளையும் இழக்கிறாள் பெண். வெநொரு மனையில் உள்ள பெண்களோ போட்டிருக்கும் அணிகலன்கள் போதாதென்று புதுப்புது நகைகளை பூட்டிக் களிக்கின்றனர். பூமாலைகளைச் சூடி மகிழ்கின்றனர். நல்வாழ்வு வாழ்ந்த மக்கள் மனத்திலே பொருளாசையைத்தூவி, பகைமையை உண்டு பண்ணிப் பண்பாடற்றுச் சண்டையிட்டுக் கொள்ளவும், உடமை தனியவர்களுடையதாக ஆக்கிக் கொள்ளவும் வகை யைச் செய்து விட்ட மூர்க்கன் எவனேயாயினும் சரியே. அவள் தவப்பண்பிலான். அவனது இழி தன்மைச் செயலால், உலகம் உடையோனென்றும், இல்லாதானென்றும் பின்னப் பட்டுப் பேதலிப்புத் தன்மையில் சீரழிந்து நிற்கிறது. இந்த நிலையில் உள்ள இன்றைய இந்த உலகம் மிகமிகக் கொடியது. இந்த இயல்பினை உணர்ந்தோர் இனியது காண எழுக!" களை இப்படி இடித் துரைத்து மக்கள் சமுதாயத்திலே எழுச்சிக் கனல் மூட்டுகிறார் பக்குடுக்கை நன்கணியார். ஓரி னெய்தல் கறங்க வோரில் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப் புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர்

பைத் லுண்கண் பனிவார் புறைப்பப் படைத்தோன் மன்றவப் பண்பிலாளன்