உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 2000 இன்னா தம்மவிவ் வுலகம் இனிய காண்கித னியல் புணர்ந்தோரே. சங்கக் காலக்‘கணியார்' இருக்கும் நிலையை எடுத்து இயம்பி சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வற்ற நிலைமையை உண்டாக்க முயலுங்கள் எனக் கூறிப் போந்தார்! அவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதைக் கூறினார். இன்றைய மனிதன் சமுதாயத்தை எந்த வகையில் அமைத்தால் சமத்துவம் அழியாதிருக்கும் எனத் திட்டங்கள் வகுத்துச் செயல்பட முனைகிறான். பொதுவுடமைக்கு வித்திட்டவர்கள் சங்க காலத் தமிழ்ப் புலவர்கள். அதைப் பேணி வளர்த்து மரமாக்கிய வர்கள் இடைக்காலத் தமிழ் புலவர்கள். அது பலன் தரும் காலம் வரும் போது இக்கனி இனிப்புடையதே" என்று இயம் பியவன் பாரதி. (முப்பது கோடி ஜனங்கள் சங்கம் முழுமைக்கும் பொதுவுடமை ஒப்பிலாத சமுதாயம் உலகத்திற்கொரு புதுமை..."-பாரதி.) எனவே தமிழர் சமுதாயத்தில் பொது வுடமைத் தத்துவத்தைப் புகுத்த முனைபவர்கள் அதை வெளி நாட்டுக் கனி என்று சொல்லத் தேவையில்லை; நமது தோட்டத்திலே பூத்துக் காய்த்துக் கனிந்த நற்கனி என்றே புகலலாம். புகல வேண்டும். பாடல்: புறநானூறு. 194

  1. சாட்டை!! எனும் திங்கள் ஏட்டில் 18-11-1955 ல் வெளி வந்தது.