உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுளைக் காணும் வழி! .

  • கடவுளைக் கண்டதுண்டா?" என்றும்,

"காட்ட முடியுமா? என்றும் கேட்பவர் பலர். இதற்கு, "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" என்ற தத்துவத்தைக் கூறித்தப்பிக்கமுயல்வர் சரியான ஆராய்ச்சியின்பால் படாதவர். ஆழ்வார்களிலே திருமழிசை ஆழ்வார் என்பவர் ஒருவர். இவர் ஆரம்பத்தில் “கடவுளுண்டா? கண்டதுண்டா?” என்ற கேள்வியை எழுப்பி, கடவுள் இல்லை என்ற தத்துவத்தை நிலை நாட்டி வந்தவர். இறுதியில் ஆண்டவன் ஒருவன் உண்டு என்றும், அண்ட சரா சரங்களும் அவன் படைப்பால் எழுந்தது என்றும் நம்பி நல்வழிப்பட்டு ஆழ்வார்களில் ஒரு வரானவர். உலகத் தத்துவவாதிகளிலே திருமழிசை ஆழ்வா ரைத் தலைசிறந்தவரென்று சொன்னால் மிகையாகாது! பழமையை ஒப்புக் கொண்டு, பழமைக்கு மாறுபடாத சில புதிய கருத்துக்களை வழங்கிய மேதை திருமழிசையாழ்வார். அவரிடத்திலே ஒரு சந்தேகவாதி தோன்றி "கடவுளை நம்பும் பெரியவரே, அவரைக் காணும் மார்க்கம் எது?" என்று கேட்டிருக்கிறான். அதற்குத் திருமழிசை ஆழ்வார் சொல்லிய பதில்: *‘கடவுள் உண்டு என்பது ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்ட ஒன்று அவரைக் காண எண்ணும் அன்பர்களே கேளுங்கள். திருநீற்றுப் பூச்சாலோ, திருமண் சாத்திக் கொள்வதாலோ, ஆறுகாலமும் ஆலயத்திற்குச் சென்று வழிபடுவதாலோ, அர்ச்ச னைகள் செய்வதாலோ, இதுபோன்ற இன்னபிற காரியங்களி னாலோ ஆண்டவனைக் காண இயலாது! அவனைக் காண வேண்டுமானால் தீயச்செயல் வழியை அடைத்து மீண்டும் அதைத் திறக்க முடியாதபடி மூடிவிட வேண்டும். நற்செயல் வழியைத்திறந்து விட வேண்டும். நாளும் அந்த வழியிலிருந்து விலகாமல் செல்லவேண்டும். ஞானச்சுடர் ஏற்றித் தேட