உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டும். எலும்பும் இளக, நெஞ்சுருக, உள்கனிந்த அன்புக் கண்ணாடி கொண்டு அதன்வழியை நோக்கினாலல்லாது ஆண்டவனை எவராலும் காணமுடியாது! கடவுளிருக்கு மிடத்தைத் தேடுவது தப்பு! நீ அவனைக் காணும் வழியை நாடு. அது சாதாரணமான வழியல்ல. மிகக் கடினமான வழி! காவி உடை கட்டுவதாலோ, கையில் திருவோடு ஏந்துவ தாலோ, இல்லறத்தைத் துறப்பதாலோ, ஏகாங்கியாவதி னாலோ, ஆலயவழிபாட்டாலோ, அர்ச்சனை, நைவேத்தியங் களாலோ, உருவமைத்துக் கும்பிடுவதாலோ ஆண்டவனைக் காணமுடியுமென்று சொல்பவர்களை நம்பாதே! அன்பு வழி ஒன்றுதான் ஆண்டவனைக் காணும் வழி. அதுவும் வெறும் அன்பு வழியாக இருந்தால் போதாது! புன்புல வழியடைத்து, நன்புல வழி திறக்கப்பட்டு, ஞானச்சுடர் கொளுத்தி, எலும்பு இளக, நெஞ்சம் உருக, உள்கனிந்த அன்பு கொண்டால்தான் ஆண்டவனைக் காணலாம்! அது இல்லாமல், வேறு எந்த வழியாலும் காண இயலாது ஆண்டவனை” என்கிறார் திருமழிசை ஆழ்வார்! "புன்புல வழியடைத்து அரக்கிலச்சினை செய்து நன்புல வழி திறந்து ஞான நற்சுடர் கொளிசி என்பி ளெல்கி நெக்குருகி உள்கனிந் தெழுந்தஓர் அன்பிலன்றி ஆழியானை யாவர் காண வல்லரே திருமழிசையாழ்வார் பிரபந்தம் போலி ஞானிகளாலும், மதப் புரட்டர்களாலும் கடைப் பிடிக்க முடியாத வழி இந்த வழி. புன்புல வழியை அடைத்து, நன்புல வழியைத் திறந்து, ஞானச் சுடரை கொளிசி, என்பி ளெல்கி, நெக்குருகி, உள்கனிந்து எழுந்த அன்பு கொண் டொழுகுபவர் யார்? அப்படி யாரேனும் இருந்தால் கடவுளைக் கண்டவர் அவரே! அவராலும் பிறருக்கு ஆண்டவனைக் காட்ட முடியாது! ஒவ்வொருவரும் தனக்குத் தானே அந்த நிலை எய்த வேண்டும். இல்லை எனில் ஆண்டவனைத் தரிசிக்கும் பேறு கிட்டாது! 8 'சாட்டை எனும் திங்கள் ஏட்டில் 4.12.1955 வெளிவந்தது.