இது கொள்ளப்படுமோ? செய்யுள்களிலே இடைச்செருகல் புகுந்து விட்டது எனச் செப்புவோர் பலர். இவர்கள் இலக்கியச் செய்யுள்கள் அனைத் திலும் நுழைப்பு வேலை நடந்திருப்பதாகவே கருதுகின்றனர். வ.உ.சி. கூட “திருக்குறளில் முப்பது பாட்டுகள் இடைப் புகுந்தோர் திணித்தது; வள்ளுவர் இயற்றியதல்ல" என்கிறார். அந்த முப்பது செய்யுளையும் இடைப்பாயிரம் என்று வைத்தே அந்த முப்பது ந்துள்ளார். கம்ப ராமாயணத் உரை ல் திலே அநேக செய்யுள்கள் இடைச் செருகல் என்பது டி.கே.சி. கருத்து. சில செய்யுள்களில் சில பதங்கள் மட்டும் மாற்றப் பட்டிருப்பதாகக் கூறி அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற முடிவில் கம்ப ராமாயணச் செய்யுள்கள் பலவற்றைத் திருத்தவும் செய்துள்ளார். டி.கே.சி. பாரதி பாடல்களில் கூட செருகல் வேலை நடந்துவிட்ட தென் அலக்கிண்டு. சிலர் . பாடவும் காண்கிறோம். இந்தச் செருகல் கண்டுபிடிப்பு ஆய்வாளரில் என் நண்பரும் ஒருவர். அவர் ஒரு நாள் இது பற்றிய விவாதத்தை ஆரம்பித்தார். “நீங்கள் ஒரு முடிவிற்கு வந்திருப் பவர்கள். என்னுடன் விவாதிப்பதால் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. நானும் தங்கள் கருத்தை முழுதும் ஆதரிப்பவனல்லன். இந்த நிலையில் நமது விவாதம் நேரக் கொலையில் முடியுமே தவிர நியாயத்தை ஆராய்ந்தறிய உதவாது" என்றேன். நண்பர் விடுவதாயில்லை. "இது ஏன் இப்படி இருக்கக்கூடாது!" என்று கேட்டார். நான் என்னை மறந்து வாய்தவறி 'எது?' என்று கேட்டு விட்டேன். நண்பர் ஆரம்பித்து விட்டார் தனது இலக்கிய ஆராய்ச்சியை! அவரது வெட்டும் ஒட்டும் வேதனையை தருவதெனினும் வேறு வழி யின்றி கேட்டாக வேண்டிய நிலைக்காளாகி விட்டேன். நண்பர் ஆரம்பித்தார்.
பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/54
Appearance