உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 அதன் பிறகு வயல்களில் பயிர்களுக்கிடையே அலர்ந்திருக்கும் கொட்டிப்பூ என்று சுற்றி அலைந்து இறுதியிலே தாமரை யிடமே வந்து சேரும் வண்டினம் வாழும் ஊரிலல்லவா நீங்கள் வாழுகிறீர்கள்! அந்தக் குணம் அப்படியே உங்களுக்கும் படிந் திருக்கிறது. ஏன் என்னைப் பைத்தியம் என்று சொல்ல மாட்டீர்கள்? நான் உங்களுக்காக-உங்கள் அன்புக்காக- ஆதரவுக்காக ஏங்கியபடி இல்லத்திலே விழுந்து கிடக்கிறேனல் லவா! என்னை உங்கள் கண்களுக்குப் பைத்தியமாகத்தான் தெரியும். ஆனால் ஒன்று சொல்கிறேன். இப்படியே நீங்கள் என்றும் என்னை ஏமாற்றிவிட முடியாது! உங்கள் செய்தி முற் றிலும் எனக்குத் தெரிந்துவிட்டது. எனக்குப் பைத்தியமில்லை. நான் இனியும் ஏமாற மாட்டேன்! இது எந்தத் தம்பதிகட்கும் இடையில் நடந்த உரையாட லன்று. இக்கருத்தினை உள்ளடக்கிய பாட்டு ஒன்று கலித் தொகையில் வருகிறது. (பாட்டு) பொய்கைப்பூப் புதிதுண்ட வரிவண்டு கழிப்பூத்த நெய்தல்தா தமர்ந்தாடிப் பாசடைச் சேப்பினுள் செய்தியற்றி யதுபோல வயற்பூத்த தாமரை மைதபு கிளர்கொட்டை மாண்பதிப் படர்தரூஉங் கொய்குழை அகைகாஞ்சித் துறையணி நல்லூர் ; அன்பிலன் அறனிலன் எனட்படான் எனவேத்தி நின்புகழ் பலபாடும் பாணனும் ஏமுற்றான்; நஞ்சுயிர் செகுத்தலும் அறிந்துண்டாங் களியின்மை கண்டுநின் மொழிதேறும் பெண்டிரும் ஏமுற்றார்; முன்பகல் தலைக்கூடி நன்பகல் அவள் நீத்துப் பின்பகல் பிறர்த்தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய்; என வாங்கு கிண்கிணி மணித்தாரோ டொலித்தார்ப்ப ஒண்டொடிப் பேரமர்க் கண்ணார்க்கும் படுவலை இதுவென ஊரவர் உடன் நகத் திரிதருந் தேர்ஏமுற் றன்றுநின் னினும் பெரிதே (மருதக்கலி-74) "சாட்டை" கிழமை ஏட்டில் 9.10.1955 இதழில் வெளிவந்தது.