58
- ஆணாகப் பிறந்தவன் ஊர் சுற்றாமல் வீட்டிற்குள்ளே
முடங்கிக் கிடக்க முடியுமா? "வீட்டுக்குள்ளே இருக்கும்படி யார் சொன்னது? வேசிகள் வீடே கதி என்று இரவு பகலாக அலைந்து கெடுகிறீர்களே, அதைக் கொஞ்சம் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்ல வந்தால்..." இரவு பகலாக வேசி வீடுகளைச் சுற்றி வருகிறேனா? யார் சொன்னது உனக்கு?” "யார் சொல்ல வேண்டும்? உங்களைப் பற்றித்தான் இந்த ஊரே சிரிக்கிறதே! 'போதும் நிறுத்து, பைத்தியம்போல் உளராதே!" 'யாருக்குப் பைத்தியம்? எனக்கா? சொன்னால் ஊர் நம்ப வேண்டுமே! உங்களுக்குத்தான் பெண் பைத்தியம்! காலையில் ஒருத்தி வீடு. நண்பகலில் வேறொருத்தி வீடு. மாலையில் இன்னொருத்தி இல்லம் என்று அலைகிறீர்கள்! தினம் தினம் உங்களைப் புகழ்ந்து பாடுகிறார்களே பாணர்கள்! அவர்கட்கு வேண்டுமானால் பைத்தியம் என்று சொல்லலாம். இல்லா விட்டால் மனைவி வாட, மற்றொருத்தி இல்லம் சென்று துய்க்கும் உங்களை அன்புடையார், அறவழி பிறழாதவர் என்று புகழ்ந்து பாடுவார்களா? உங்கள் சொல்லை நம்பி ஏமாறுகிற பெண்களிருக்கிறார்களே, அவர்களைப் பெரும் பைத்தியம் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் கொல் லும் நஞ்சொத்த உங்கள் சொல்லை மெய்யென நம்பி ஏமாறு வார்களா? உங்களை ஏற்றிச் செல்கிறதே தேர், அதற்குக் கூடப் பைத்தியம்தான். இல்லாவிட்டால் சதா ஒருத்தி வீடு மாற்றி ஒருத்தி வீட்டுக்கு உங்களை இட்டுச் சென்றுகொண்டே இருக்குமா? ஊர் என்ன எண்ணுகிறது என்பதை உணராமல், யாருக்கும் எதுவுமே தெரியாதென்ற நினைப்பில் பரத்தையரை நாடி அலையும் உங்களைவிட பைத்தியக்காரர் யார் இருக்க முடியும்? காலையிலே பொய்கையிலுள்ள தாமரை மலர், அப்புறம் கழி (கடற்கரைச் சிறு ஓடை) யிலே மலர்ந்திருக்கும் அல்லிப்பூ,