- ஒன்று சொன்னான்; ஒன்பது கேட்டாள்! அவன் அந்த ஊர்த் தலைவன். செல்வாக்கு மிகுந்தவன். பாணர்கள் புகழ்ந்து பாட உயர்ந்த வாழ்வு வாழ்பவன்! ஊர் மக்கள் தன்னை உயர்ந்தவனாகக் கருதிக் கொண்டிருப்பதாக நினைத்து நடப்பவன். அவன் தேர் வெங்கலமணி ஓசை கிண்கிணி கொட்ட எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கும். அந்த ஒலியைக் கேட்டு உத்தமப் பெண்கள் கதவைத் தாழிட்டு மூடிக் கொள்வர். பரத்தையர் பகட்டுடையுடன் வாசலுக்கு ஓடி வருவர். அவன் அவர்களின் வீடுகளில் இறங்குவான். விரும்புகின்ற நேரம் வரையில் தங்கிக் கலவியில் ஈடுபட்டுக் களித்து மகிழ்வான். பிறகு வேற்றவள் இல்லமேகுவான். அங்கேயே தங்கிடாமல் இன்னொருத்தி இல்லத்திற்கு எழுந் தருள்வாள். இத்தகைய அந்த உத்தமனுக்கு ஒரு மனைவி. அவள் இவன் செயல்களைப் பார்த்துப் பார்த்துப் பகலிரவாக மனம் புழுங்கிக் கொண்டே இருந்தாள். இந்த நிலையில் ஒரு தினம் அவன் எங்கெல்லாமோ சுற்றி அலைந்துவிட்டு நேரம் தப்பிய நேரத்திலே வீடு வந்து சேர்ந்தான். வரவேற்பு முடிந்து, ஆகராதிகள் வழங்கப்பட்டு ஆயாசம் நீங்கப்பட்டவ னாக நிம்மதியுடன் அவன் வீற்றிருந்தான். அவன் பக்கத் திலே அவள் சென்றாள். இது உங்களுக்கே நன்றாயிருக் கிறதா?' என்று இதமாகக் கேட்டாள். 66 எது?' என்று, ஏதும் அறியாதவனைப் போல் கேம் டான் அவன். “ நீங்கள் இப்படி ஊர் சுற்றுவது?” என்று அவனைப் பார்த்துக்கொண்டே கூறினாள் அவள். -4
பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/58
Appearance