இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
56 என்று கூறினேன். ஒரு முறை போதாது நூறுமுறை சொல் லும் என்றார். சொல்லா விட்டால் நண்பர் விடமாட்டார் என்று தெரியுமாதலால் கண்ணை மூடிக் கொண்டு, "செல்வத்தின் பயனோ துய்ப்போ மெனிலோ பலரே" என்று உருப்போட ஆரம்பித்தேன். நூற்றில் பாதியைத்தாண்டி யிருக்கும்போது ஒரு முறை கண்களைத் திறந்து நோக்கினேன். நண்பரைக்காணவில்லை; எனினும் எனது நாவானது, "செல்வத்தின் பயனோ யீதல் துய்ப்போ மெனிலோ தப்பினர் பலரே என்று உச்சரித்துக் கொண்டிருந்தது. குறிப்பு:- இந்த வரிகள் புறநானூற்றுச் செய்யுள்களில் 189 வது செய்யுளின் இறுதி இரு அடிகளாகும். இயற்றியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆவார். www 30:10.1955 'சாட்டை” எனும் கிழமை ஏட்டில் வெளிவந்தது,