62 நெஞ்சங்கவரும் அஞ்சுகமாகவே விளங்கி வந்தாள். கொலைக் களத்திலே, வெட்டுண்டு கிடந்த கோவலன் எழுந்து, மாதகியானால் மடிமேலவா" என்று கூப்பிடவில்லை. மாயம் மருட்டிய மயக்க நிலையில் கண்ணகியிருந்தபோது கோவலன் தோன்றி, 'ஈண்டிருக்க' என்று இயம்பிப் போனதாகவே கதை! , கண்ணகி கன்னித்தமிழ் நாட்டின் பெண்ணழகி, பெற் றோர்கள் போற்றும் பொற்பிழம்பாக, உற்றார்கள் நேசிக்கும் உத்தமியாக, ஊரார்கள் ஏற்றிப் போற்றும் ஒழுக்கமுடையவ ளாக, கணவனுக்குக் கட்டுப்பட்ட அன்பு மனைவியாக, கண் ணீருக்கிடையே புன் சிரிப்புடன் வாழ்ந்த பொறுமைப் பெட்டகம். தற்கொண்டான் பேணுத லுக்காகத் தன்னையே தியாகம் செய்து கொண்ட வீரமங்கை. குலப்புகழ் அழியா திருக்க குவலயத்தையாளும் மன்னனையும் எதிர்க்க அஞ்சாத் தீரமிக்க செந்தமிழ்ப் பாவை. கணவன் கள்வன் என்றால், அந்த சொற் கேட்டும் சும்மா இருந்தால், குலப் பெருமை குடியோடிப் போகுமென்று கொதித் தெழுந்து கொற்றவனை எதிர்த்து அவனையும் திருத்தி, அநீதிக்கு முடிவுகட்டி மாண்டு விளம்பர மடிந்த மறத்தமிழச்சி. ஆனால் அவள் வரலாறு ஜோன்-ஆப்-ஆர்க்கை பாராட்டி ரசிக்கும் கல்லூரிக் காளைகள், ஜான்சி ராணியின் சரித்திரத்தை எடுத் தியம்பும் தேசீயச் சரித்திர ஆசிரியர்கள். கண்ணகியை மறந் தார்கள் அல்லது மறைத்தார்கள். நம்முடைய சரித்திரம், நம் நாட்டு வரலாறு நமக்கே புரியாமல் மறைக்கப்பட்டு வத்திருப்பது மட்டுமல்ல, வேற்றார்கள் சரித்திரம் அவர்கள் வீரம் இங்கே உலா வர விட்டு வேடிக்கை பார்ப்பவர்களாகவும் வாழ்ந்துவிட் டார்கள். அதனால்தான் சொன்னான்; 'சேரன் தம்பி சிலம்பு அசைத்ததும்..” என்று பாரதி. நம்முடைய காலத்திலேனும் மாறுதல் செய்வோமென்றால் மறுத்துரைக்காமல் ஒரு முகப் பட்டு முன்பு வருவோரைக் காண்பது அரிதாக இருக்கிறது. பிறநாட்டான், வெளிநாட்டான் ஏன் அண்டை மாநிலத்தான் கூடத் தமிழையும் தமிழன் பெருமையையும், தமிழ் கலாச் சாரத்தையும் அறியவில்லை. அறியாததோடு மட்டுமல்ல மாகவில்லை.
பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/63
Appearance