உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 அலட்சியமாகப் பேசுபவதையும் கேட்கிறோம். அதைக்கண்டு ஆத்திர மடைவோர்களும் நம்மிடையே இல்லாமல் இல்லை. ஆத்திரம் வெற்றியாகாது. ஆணவம் பிடித்தோருக்கு பதில் சொல்லியதாக அமையாது, நாம் நம்முடைய கலைகளை கலாச்சாரங்களை கருத்துப் பெட்டகங்களைப் பிரச்சார வாகனங்களில் ஏற்றிக் கொண்டு புறப்பட வேண்டும். கன்னித்தமிழ் நாட்டுக் காரிகையின் கதையைக் கேளுங்கள் கணவன் மீது பழி சுமத்தப்பட்டபோது அவள் நெஞ்சம் கொதித்து வீறிட்டெழுந்து செய்த செயலைக் கேளுங்கள்; என்று அண்டை மாநிலங்களின் பெண்மணிகளிடம், பெரியோர் களிடம் கிராமம் கிராமமாகச் சென்று பறை சாற்றினால் தமிழகத்தின் மேன்மையைத் தமிழ்ப்பெண்ணின் கற்பை வட நாடு அறியும், வாழ்த்தும் நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவது போன்று, மேன்மக்கள் அமர்ந்துள்ள சபைகளிலே புலவர் பெருமக்கள் எழுந்து நின்று, கன்னித் தமிழுக்கு ஈடான பிற மொழி இல்லை என்று சொல்லுவதால், அதைக் கேட்ட மக்கள் ஆர்பாட்டத்துடன் கரவொலி எழுப்புவதால் தமிழ் வளர்ந்து விடாது. தமிழன் பெருமையை அண்டை நாட்டான் அறிந்து போற்றிப் புகழ மாட்டான். அண்டை அயல் மாநிலங்களின் கலைகளும் கலாச்சாரமும் தமிழ்நாட்டைச் சூழ்ந்துவிட்டன. தமிழ்க் கலாச்சாரம் அழிந்து கொண்டு வருகிறது என்று தமிழ் நாட்டிற்குள்ளேயே சொல்லிக் கொண்டிருந்தால் வருவது எதுவும் வழியிலே நின்று விடாது. இந்தியைப் பரப்ப இந்தி பிரச்சாரசபை இங்கே வேலை செய்கிறது. ஆனால் தமிழன் இனக் கட்டுப் பாட்டு டன் வடக்கிற்குத் தமிழகத்தின் வரலாற்றை, தமிழ் மொழி யின் உயர்வை முன்னும் தந்ததில்லை. இடையிலும் தர வில்லை. இன்றும் கொடுக்கவில்லை! நமது அரசாங்கம் மனம் வைத்தால், தமிழனின் அறிவை, பண்பாட்டை, கலாச்சாரத்தை வடநாட்டில் மட்டுமல்ல உலகமெங்குமே பரவச்