உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 செய்யலாம். படித்து வேலையில்லையென்று தெருத் தெரு வாக அலையும் இளைஞர்களை அழைத்து, உணவும், சிறிது ஊதியமும் கொடுத்து, வடநாட்டுக்கும் வெளிநாட்டுக்கும் அனுப்பி, தமிழன் பெருமையைப் பேச வைக்கலாம். இந்தி கற்றிருக்கும் எழில்மிக்க யுவதிகளை அழைத்து, கண்ணகியின் கதையை இந்தியிலே மொழி பெயர்த் தெழுதிக் கொடுத்து வட நாட்டிற்கு அனுப்பி வைக்கலாம். அங்கு சென்று பிரச்சாரம் செய்விக்கலாம். மனம்வைத்தால் மார்க்க மில்லாமல் இல்லை. இது விளம் பரயுகம். நமக்கு நாமே விளம்பரம் செய்து கொள்ள வேண்டும். எல்லா இனங்களும் எல்லா நாடுகளும் இதில் முந்திக் கொண்டு விட்டன. தமிழினம் மட்டும் இன்னும் விழிப் படையவில்லை. புராணப் பெண்களுக்கும், மேலான காப்பியப் பெண் கண்ணகி! அவள் கதையை, தமிழகத்தில் மட்டுமல்ல, வடநாட்டிலும் பரவ செய்ய வேண்டியது தமிழனென்று தன்னைக் கூறிக் கொள்ளும் ஒவ்வொருவனுடைய கடமை யுமாகும். ஜோன்-ஆப்-ஆர்க்கும், ஜான்சி ராணிக்கும். மேலானவள் எங்கள் கண்ணகி, என்று சொல்லுவதிலே ஒவ் வொரு தமிழ் இளைஞனும் பெருமைப்பட வேண்டும். செல்லும் நாடுகளிலெல்லாம் எடுத்துக் கூறி, விளம்பரமற்றுக் கிடக்கும் தமிழக வரலாற்றுக்குப் புகழ் தேட வேண்டும். அப்படிச் செய் வதிலேதான் தமிழகம் உலகினிடை மதிப்பு பெற்று உயரும். வறட்டுக் கூச்சலினாலோ, வீண் ஆர்ப்பாட்டத்தினாலோ நமக்குள்ளேயே கருத்து வேற்றுமை கொண்டு மோதிக் கொள்வதாலோ, தமிழும் தமிழகமும் உலகினிடை மதிப்பு பெற்று விடாது. இதைத் தமிழ் இளைஞர் கூட்டம் உணர வேண்டும், அரசினருக்கும் உணர்த்த வேண்டும். (கவி காமு ஷெரீப் உடைய ஒரு சொற் பொழிவின் சுருக்கம்) 4-3- 1956 சாட்டை" எனும் வார ஏட்டில் வெளியானது