பக்கம்:கண்ணகி தேவி.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி தேவி

15


பெண் துணைகிடைத்ததே என்று மிகவும் மகிழ்ந்தான்.

கவுந்தி, செல்லும் வழிகளின் இயற்கையைக் கூறத் தொடங்கி, 'கோவல, நாம் இனிச் செல்ல வேண்டிய இடத்துக்கு வழி வயலும், தோட்டமும், சோலையுமான வழியேயன்றி, வேறு வழியில்லை. கண்ணாற்பார்க்கவும் முடியாத இம்மெல்லியாளை அழைத்துக்கொண்டு சோலேகளினூடே நிழல் வழியாகச் செல்லக்கருதினால் அவ்விடங்களில் வள்ளிக்கிழங்கை அகழ்ந்தெடுத்த குழிகளில் சண்பக மாங்களின் வாடற்பூக்கள் சேர்ந்துபொய்க்குழி படுத்தியிருக்கும். அவ்விடங்களை அறிந்து பாதுகாவலுடன் செல்லாவிடின், ஆபத்து உண்டாகும். அது பற்றித் தரைநோக்கி ஒதுங்கி நடந்தால், பலாப்பழங்கள் தலையிலும் முதுகிலும் முட்டும்; தோட்டங்களின் வழியாகச் சென்றால், பலாச் சுளைகளிலுள்ள விதைகள் காலில் உறுத்தும் இங்கனம் சோலையும் தோட்டமுமாகிய கரை வழியன்றி வயல்வழியாகப் போவோமாயின், குளங்களில் மீன் இரை தேரும் நீர் நாய்கள் தாவக்காணினும், சேல் மீன்கள் உகளக் காணினும், வாளை பாயக்காணினும், மலங்கு மிளிரக் காணினும், இவள் கலங்குவாள்; சோலைகளிலுள்ள தேனிறால் உடைந்து ஒழுகி வரும் தேன் கலந்த நீரை இவள் குடங்கையால் முகந்து பருகவும் கூடும்; வரம்பின் மேலிட்ட குவளைப்பூக்களில் படிந்துள்ள வண்டுகளில் நீங்கள் அடியிடவுங் கூடும். இவ்வழிகளை யெல்லாம்விட்டு, பெருவாய்க்காலின் அடைகரை வழியாகச் சென்றாலோவெளின், அங்குள்ள நண்டும் நத்தையும் நம் அடியால் நோயுறுமாயின், அக்கொலைப் பாவம் நம்மால் தாங்கவும் ஒண்ணாது. ஆதலால், இவற்றையெல்லாம் பாதுகாத்து நீ உன்மனைவியுடன் கவனத்தோடு நடக்கவேண்டும்” என்று கூறித் தனது