கண்ணகி தேவி
35
நப்பின்னைப்பிராட்டியோதான்!’ என்று கூறி உவகை பொங்கி, “இவர் காட்சி நம் கண்களில் அடங்கா!” எனப் புகழ்ந்துகொண்டனர்.
இவ்வாறு உண்டு, வாய் பூசி, நீர் பருகி அமர்ந்க கோவலனுக்குக் கண்ணகி, அடைக்காயும் வெற்றிலையும் கொடுத்து அருகில் நின்றாள். கோவலன், அவளை 'வருக' என்று தழுவிக்கொண்டு, 'வேடர் வழிப்பறிக்கும் பாலைவனத்தில் பருக்கைக் கற்களின்மீது அடி விட்டு கடப்பது கண்ணகிக்கு இயலுமோ!' என்று எமது தாய் தந்தையர் என்ன இடும்பை உற்றார்களோ! யாம் இவ்விதம் துயரம் அடைந்தது, கனவோ! கனவாயின், முன் செய்த தீவினைப்பயன்தானோ! உள்ளம் மறுகுதலால், இப்போது எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. நாளெல்லாம் வீணரோடும் துஷ்டரோடும் கூடி, நல்வினை செய்ய மறந்து, பிறரைப் புறங்கூறி, வெடிசிரிப்புச் சிரித்து, நல்லொழுக்கங் கெட்டேன்; இனி எனக்கு நற்கதி உளதாகுமோ! பெற்றோர்க்குச் செய்யும் பணியை இழந்தேன்; உனக்கும் துன்பம் செய்தேன்; இவ்வழுவான ஒழுக்கம் இழுக்கமென்பதைச் சிறிதும் நினைத்திலேன். யான் இத்தன்மையனாகவும் 'மதுரைக்கு எழுக' என்றேனாக, அதற்கு முறையன்று என மறுக்காது உடனே உடன்பட்டு என்னோடு வந்தாய். பாவாய், என்ன காரியம் செய்தாய்! “கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும், கொண்டானே அல்லால் அறியாக் குலக் கொடியே!” என்று இரங்கிக் கூறினான். அதற்குக் கண்ணகி, “நீர் என்னைப் பிரிந்தமையால் அறவோர்க்களித்தலும், அந்தணரைக் காத்தலும், விருந்து போற்றுதலுமாகிய இல்லற ஒழுக்கத்தை இழந்திருந்த யான், உமது பிரிவினால் எனக்கு உண்டான வெறுப்பையும் துன்பத்தையும் புறத்தில் தோன்றாது நெஞ்சில் அடக்கி அதனை மறைக்க எப்போதும் முக