பக்கம்:கண்ணகி தேவி.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

கண்ணகி தேவி

தோட்டுனை துறக்கும் துறலொடு வாழுமின் ;
தாழ்கழல் மன்னன் தன்திரு மேனி
வாழ்க சேனா முகம்!"

என்று வள்ளுவன் தெருவெங்கும் கூறி முரசறைந்தான்.

இவ்வாறு வஞ்சிமானகரில் வடநாட்டு யாத்திரை குறித்துப் பறையறையப்பட்ட பின்னர் அன்று மாலையில் ஆசான், பெருங்கணி, அமைச்சர், சேனாதிபதிகள் சூழ்ந்து வாழ்த்தி, ஆணையை எதிர்பார்த்து நிற்க, சேரன் செங்குட்டுவன் சிங்காதனத்தில் வீற்றிருந்து, சேனைத் தலைவர்களை நோக்கி, "ஆரியமன்னர்கள், தம் நாட்டில் நடந்த ஒரு சுயம்வரத்தில் கூடியிருந்த போது, தமிழ் நாடாளும் வேந்தர் படையுடன் வந்து இமயமலையின் நெற்றியில் தமக்குரியவில், கயல், புலிக் குறிகளைப் பொறித்த நாளில் 'எம்போலும் முடிமன்னர் ஈங்கில்லை,' என்று கூறித் தமிழ் வேந்தரை இகழ்ந்துரைத்த செய்தி, இங்கு வந்த தாபதரால் அறியலானோம்; அவ்விழிந்த மொழி தமிழ் வேந்தர் அனைவர்க்கும் சால இழிவு பயப்பதாகும்; ஆகலின், அங்கனம் இகழ்ந்து பேசிய ஆரிய மன்னர் முடிமேல் பத்தினிக் கடவுளைச் சமைத்தற்குரிய கல்லை ஏற்றிக் கொண்டு வருவேன் ; அங்ஙனம் செய்யாது என்கை வாள் வாளா வருமாயின், நான் பகையரசரை நடுங்கச் செய்யாது குடிகளை நடுங்கச்செய்தகொடுங்கோலனாகக்கடவன்!” என்று அப்பேரவையில் சினமிகுந்து வஞ்சினங் கூறினன் ; ஆசான், 'அரசே, கோபந் தணிக!' என்று சமனஞ் செய்தனன். அப்போது நிமித்தம் வல்லவனகிய மெனத்திகன் எழுந்துநின்று, 'வேந்தே, பகைவேந்தரெல்லாம் உன் திருவடியை வணங்கத்தக்க கல்முழுத்தம் இதுவே; நீ கருதிய வட திசைச் செலவுக்கு இப்போதே எழுதல் நன்று,' என்றான்.