பக்கம்:கண்ணகி தேவி.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி தேவி

67

நாடு செழித்தது. அவன் சிங்காதனமேறி அரசாளுகின்றனன்," என்று கூறினன்.

இங்கனம், வார்த்தையாடிக்கொண்டிருக்கையில் மாலைக் காலம் வந்தமையால் காலக் கடன் முடிக்கச் திசையில் செவ்வானத்தில் திகமும் வெண்பிறையைக் கூர்ந்து கோக்கினன். அப்போது அரசனது சோதிடன், “நாம் வஞ்சிமாநகர் விட்டு இங்கு வந்து முப்பத்திரண்டுமாதம் கழிந்தன.” என்றான். உடனே அரசன் தன் ஆசனத்தில் வந்தமர்ந்து, மாடலனிடம் தன் மைத்துனனாகிய பெரு கற்கிள்ளியின் ஆட்சி நலம் எத்தகையது என்று வினவ, மறையவன்,"சோழர் குலத்தவர் செங்கோல் கோடி வேறாகும் காலமும் உண்டோ?" என்றுவிடை பகர்ந்தான். அதன்மேல் சேரன் மாடலனுக்குத் தன் நிறையாகிய ஐம்பது துலாம்பாரம் பொன் தானமாக அளித்தனுப்பினன். தமிழ் நாடாளும் வேந்தர் ஆற்றலே அறியாது இகழ்ந்து அவமானமுற்ற கணகவிசயரைச்சோழ பாண்டியர்க்குக் காட்டி வரும்படி நீலன் முதலிய ஒற்றரை அனுப்பிவிட்டுக் கங்கைக் கரையி னின்றும் சேனைகளுடன் புறப்பட்டு ஆங்காங்குத் தங்கித்தன் வருகையை எதிர்பார்த்திருக்கும் கோப்பெருந்தேவி மகிழவும், பல்வகை வாத்தியங்கள் முழங்கக் குஞ்சர வொழுகையொடு கோகர் முழுவதும் வந்தெதிர்கொள்ளவும் பட்டத்து யானை மீது வெண் கொற்றக் குடை நிழற்ற முடிமீது வாகைமாலை மிளிரச் சேரன் வஞ்சி மூதூர் வந்து புகுந்தான்.

வஞ்சிமாநகர் புகுந்த செங்குட்டுவன், ஒரு நாள் பூரணசந்திரன் விளங்கும் அந்திக்காலத்துப் பரிவாரங்கள் சூழத் தன் தன்மபத்தினியாகிய இளங்கோவேண்மாளோடுங் கூடி நிலாமணியரங்கை அடைந்து சாக்கையன் என்பான் நிகழ்த்திய கொட்டிச்சேதம்