பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 ராசீ __________________________________________

அறிந்து, அந்தச் சாயல் இவர்கள்மீது படியக் கூடாது என்று, தானே முன்னின்று பேசி மீட்டு வருவதாய்ச் சொல்லிப் புறப்பட்டான்; தன்னுடன் சில சாதிப் பெரியவர்களையும் அழைத்துச் சென்றான்; மணம் முடிப்பது என்றால் பிராமணர்கள் தேவைப்படுவர் என்பதால் அவர்களுள் சிலரையும் உடன் அழைத்துச் சென்றான்.

பலராமன் வந்ததும் அவன் தன் ஆசிரியர் என்பதால் துரியன் அவரை மரியாதையுடன் வரவேற்றான்; என்றாலும், தன் மானத்தையும் குல உயர்வையும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை; யது குலத்தவரொடு குருகுலத்தினர் சம்பந்தம் செய்துகொண்டால் அவர்கள் உயர்ந்து விடுவார்கள் என்பதால் எதிர்த்தான்; யது குலத்தினரை இழித்துப் பேசினான்.

பலராமன் மதுபானம் அருந்தி இருந்தான்; இந்தச் சொற்கள் சேர்ந்து வெறி ஏற்றியது. தாம் புதிதாய் அரசு அமைத்து உயர்வு அடைந்ததை அவர்கள் இகழ்ந்து கூறியதை வெறுத்தான். "சுதர்மை என்கிற தேவ சபை இந்திரனால் கண்ணனுக்குத் தரப்பட்டது. அதில் இருந்து உக்கிரசேனன் ஆட்சி செய்கிறான்; இந்தக் குரு குலத்தவருக்கு இந்தச் சிறப்பு ஏது? வழிவழியாகத் தேய்ந்து போன சிம்மாதனத்தில் அமர்வதில் அவர்களுக்கு என்ன சிறப்பு இருக்கிறது? எம்முடைய அரச மகளிர் பாரிஜாத மலர்களை அணியும் சிறப்பினைப் பெற்றிருக்கிறார்கள். இந்தச் சிறப்புகள் இவர்களுக்கு ஏது? யாதவர் குருகுலத்தினரை விட எந்த அளவில் தாழ்ந்தவர்கள்?" என்று கூறித் தான் ஒருவனே சாம்பனை மீட்டு அந்தப் பெண்ணையும் அழைத்துக்கொண்டு சென்று மணம் முடிப்பதாய்ப் பெருமுழக்கம் செய்தான்.