பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் திருக்கதை ◇119



மரணத்துக்கு அவன் உயிர்நாடி தொடையில் இருக்கிறது . என்று வீமனுக்குக் குறிப்புத் தந்து அவனுக்கு உதவி செய்தான். சகாதேவனுக்குப் பாரதப் போரில் ஐவரையும் காப்பதாக உறுதி தந்திருப்பதால் அவ்வாறே அவர்களுக்கு இறுதிவரை துணையிருந்து பாரதப் போரை முடித்துக் கொடுத்தான். கண்ணன் அவதாரம் முடிவு பெறுதல் பாரதப்போரில் கண்ணன் நேரிடையாகப் பங்கு கொண்டதால் பலராமன் தனக்கு வேண்டிய மாணவனாகிய துரியோதனனுக்கு நேரிடை உதவி செய்ய முடியாமல் போய்விட்டது. விதுரனும் பலராமனும் கோயில் தலங்கள் சென்று வழிபட வெளியேறி விட்டனர்; பலராமனின் சேனைகள் துரியனுக்குத் துணை செய்தன. கண்ணன் அதை மறுக்கவில்லை கண்ணன் பூமியின் சுமையைக் குறைக்கப் பிறந்தான். இதனைச் சகாதேவன் நன்கு சுட்டிக்காட்டினான். கண்ணன் துது போதற்கு முன் ஐவரையும் அவரவர் மனக்கருத்து யாது? என்று கேட்டான். சகாதேவன் மட்டும் "உன் மனக்கருத்து எதுவோ அதுவே என் மனக்கருத்து" என்று கூறினான். 'பாரதப்போர் வாராமல் தடுக்க முடியுமா? என்று கண்ணன் கேட்டான். "கன்னனை அரசனாக்க வேண்டும்; அவனோடு சபதமொழி பேசிய அர்ச்சுனனை முதலில் கொல்ல வேண்டும்; முடிக்காமல் இருக்கும் திரெளபதியின் கூந்தலைக் களைந்து மொட்டை அடிக்க வேண்டும்; அப்பொழுது வீமனின் சபதத்துக்கு வேலை இல்லாமல்