பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் திருக்கதை ◇123



ாகண்ணனுடைய ஏனைய தேவிமார்களையும் மற்றுமுள்ளவர்களையும் அருச்சுனன் அப்புறப்படுத்தி அழைத்து வந்துவிட்டான். கண்ணன் பூலோகத்தைத் துறந்தமையால் சுதர்மை என்கிற தேவ சபையும், பாரிஜாத மரமும் தேவலோகம் போய்ச் சேர்ந்துவிட்டன. பூலோகத்தைவிட்டுக் கண்ணபெருமான் போன அதே நேரத்தில் கலி பூமியில் வந்து ஆக்கிரமித்துக் கொண்டான். துவாரகை கடலில் மூழ்கியது. ஆனால், கண்ணனின் திருமாளிகைமட்டும் நிலைத்து நின்றது. கண்ணனின் திருக் கதையை அது சொல்லிக் கொண்டிருக்கிறது. அது திவ்வியத் தலமாக நிலைத்து இருக்கிறது. அருச்சுனன் எஞ்சிய துவாரகை வாழ்மக்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டான். பஞ்சநதம் என்கிற தேசம் வளம்மிக்கதாய் இருந்தமையால் அங்கே அவர்களை இருக்கச்செய்து காத்துக் கொண்டிருந்தான். கணவனில்லாத நங்கையர் ஆயிரம் பேரை அவன்கொண்டு போவதைப் பார்த்துக் கள்வர் சிலருக்கு அவர்கள்மீது விருப்பம் உண்டாயிற்று. அருச்சுனன் கையில் காண்டீபம் வைத்திருந்தான். தன்னை யாரும் அணுக முடியாது என்று அஞ்சாமல் இருந்தான். வழியில் இந்தக் கள்வர்கள் தடியையும், தேங்காய் ஒடுகளையும் ஆயுதமாகக் கொண்டு அந்தப் பெண்டிரை வளைத்தனர். "உயிருக்கு ஆசை இருந்தால் ஓடிவிடுங்கள்" என்று உரக்கக் கத்தினான். அவர்கள் இவனைப் பொருட்படுத்த வில்லை. களம் கண்ட வீரனான அருச்சுனனும் காண்டீபம் கையில் ஏந்தி அம்பு தொடுத்தான். ஆனால் அதை எய்யும் ஆற்றல் இல்லாமல் போய்விட்டது. பேடியின் கையில்