பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124◇ ராசீ



இருக்கும் வாள்போல் பயனற்றுவிட்டது. இவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அப் பெண்டிரை அவர்கள் வளைத்து இழுத்துச்சென்றுவிட்டனர். அவன் விட்ட அம்புகள் அவர்கள்மேல் பட்டன. அவை தொட்டனவே அன்றித் துளைக்கவில்லை; அம்புகளும் தீர்ந்துவிட்டன. வெறும் வில்லைக் கொண்டு தாக்கினான். அது அவர்களைத் தடவிக் கொடுத்ததே அன்றி எந்த வடுவையும் ஏற்படுத்தவில்லை. எஞ்சியிருந்த பெண்டிரும், இவன் வீரமற்ற செயலைக் கண்டு அவர்களே விரும்பிக் கள்வர் பால் சென்றனர். பதவி இழந்த காவல் அதிகாரிகள் நிலைமை இவனுக்கு ஏற்பட்டது. இதே களத்தில் இவன் வில்லெடுத் தாலே பல காத தூரம் ஒடி இருக்கிறார்கள். இவனை ஒரு வீரனாகக்கூட அவர்கள் மதிக்காமல் புறக்கணித்து விட்டனர்; அவனைத் தாக்காமல் அவன் போக்கிலேயே விட்டுச் சென்றனர். மின்சாரம் இல்லாத வெறும்கம்பியாகி விட்டான். இவன் ஏந்திய வில் எந்த அதிர்ச்சியையும் யாருக்கும் உண்டாக்கவில்லை. இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? கண்ணன் தன்னை விட்டு நீங்கியமையே என்பதை அறிந்தான்; அவனன்றி ஒர் அணுவும் அசையாது என்ற உண்மையை உணர்ந்தான்; தம்மிடமிருந்தவை வெறும் கருவிகள். அவற்றை இயக்கிய காரணன் இறைவனாகிய கண்ணன். அவன்தான் தன்னை இதுவரை இயக்கியவன் என்பதை அறிந்தான். வியாசர் சந்திப்பு அங்கிருந்து அவன் அத்தினாபுரம் ஏகினான்; வழியில் ஒரு காட்டில் வேதம் வகுத்த வியாச முனிவரைச்